அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும்  ‘புஷ்பா’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் டிசம்பர் 17ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.


தெலுங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  ‘புஷ்பா’ திரைப்படம் இந்த வருடத்தின் இறுதியில் கிறிஸ்துமஸுக்கு ரிலீசாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், கிறிஸ்துமஸ் விழாவுக்கு சில தினங்களுக்கு முன்பாக வெளியாகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது.சமீபத்தில், இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஸ்ரீவள்ளியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் லுக் வெளியிடப்பட்டது. அமர்ந்துகொண்டு முகக் கண்ணாடியைப் பார்த்து காதணி மாட்டுவதாக ராஷ்மிகாவின் புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படம் ரசிகர்களையே வரவேற்பை பெற்றுள்ளது. 




இந்நிலையில் நிச்சயம் புஷ்பா முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என முழு நம்பிக்கையில் உள்ளது படக்குழு. வரும் டிசம்பரில் படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு இரண்டாம் பாகத்துக்கு தயாராகி வருகிறதாம். ஆனால் புஷ்பா படத்துக்கு பிறகு அல்லு அர்ஜூன் ஐகான் திரைப்படம் பக்கம் ஒதுங்குகிறார். அப்படத்தை முழுமையாக முடித்த பிறகே மீண்டும் புஷ்பாவுக்காக திரும்புவார் எனத் தெரிகிறது. அதனால் புஷ்பா 2 தாமதமாகலாம் எனத் தெரிகிறது. ஆனால் முதல் பாகம் பெரிய கொண்டாட்டங்களுக்கு இடையே இருக்கும். இதனால் ஒரு இடைவெளி என்பது நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பைத் தான் உண்டு செய்யும் என படக்குழு நினைக்கிறதாம். மற்ற வேலைகளை சரியாக முடித்து வைத்துவிட்டால் அல்லு அர்ஜூன் வந்ததும் புஷ்பா படுவேகமாக தொடங்கிவிடும் என உறுதியாய் சொல்லியுள்ளது படக்குழு. டோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக புஷ்பா இருப்பதால், இரண்டாம் பாகமும் அதிக எதிர்பார்ப்பையே ஏற்படுத்தியுள்ளது.




முன்னதாக, இந்திய அளவில் எடுக்கப்பட்டுள்ள புஷ்பாவின் முதல் பார்வையான 'புஷ்பராஜ் அறிமுகம்' ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை (முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து) தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர்,  இரண்டு பாகங்களாக புஷ்பா வெளிவரும் என்று அறிவித்தனர்.  இதனையடுத்து புஷ்பா மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.