Pushpa 2 Release Date: அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ளபுஷ்பா 2 திரைப்படம், வரும் டிசம்பர் 6ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


புஷ்பா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு:


அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புஷ்பா 2 தி ரூல் திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதோடு, படத்திற்கான புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ராஷ்மிக மந்தனா கதாநாயகியாகவும், ஃபகத் பாஷில் வில்லனாகவும் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனால், இரண்டாம் பாகத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதால், பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.






எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் கதைக்களம்:


கடத்தல்காரர்களை மையப்படுத்தி புஷ்பா திரைப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பாகத்தில் கூலித்தொழிலாளியாக இருந்த புஷ்பா எப்படி, பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்புகிறான் என்பது காட்டப்பட்டது. இரண்டாம் பாகத்தில் தான் கட்டி எழுப்பிய சாம்ராஜ்ஜியத்தை ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் எதிர்த்து எப்படி காப்பாற்றப்போகிறான் என்பது படமாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் நிறைந்து இருக்க, சமந்தா நடனமாடிய ஊ அண்டவா பாடலும் ரசிகர்கள் தியேட்டரில் குவிய முக்கிய காரணமாக அமைந்தது. இரண்டாம் பாகத்திலும் அத்தகைய பாடலொன்று இருப்பதாக இசையமைப்பாளர் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பிரமாண்ட பட்ஜெட்:


முதல் பாகம் தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் பிரமாண்ட வெற்றி கண்டது. இதனால், இரண்டாம் பாகத்திற்கு இந்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை நிலவுவதை கருத்தில் கொண்டு, சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. அதேநேரம், படத்தின் வணிகமும் புதிய பென்ச்மார்க்கை அமைக்கும் வகையில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, படத்தின் இசை உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கும், ஒடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளது. தெலுங்கு சாட்டிலைட் உரிமையை ஸ்டார் மா நிறுவனம் பிரமாண்ட விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தி டப்பிங் ரைட்ஸ் உரிமை மட்டும் 300 கோடி ரூபாய்க்கு கைமாறியதாக தகவல்கள் வெளியகியுள்ளன.