மற்ற ஹீரோக்களை ஓரம் கட்டி முதலிடம் பிடித்தார் அல்லு அர்ஜூன்... அடுத்தடுத்த இடங்கள் யார் தெரியுமா?
Allu Arjun: யூத் ரேஸில் விஜய் தேவர்கொண்டா மற்றும் யாஷ் இருவரையும் பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் ஆனார் அல்லு அர்ஜுன்.

Youtful Race: அல்லு அர்ஜுன் தான் லீடிங்... யாஷ் மற்றும் விஜய் தேவர்கொண்டா பின்னுக்கு தள்ளப்பட்டனர்
இன்றைய இளைஞர்களின் ஹார்ட் த்ரோப் அல்லு அர்ஜுன், யாஷ் மற்றும் விஜய் தேவரகொண்டா. தற்போது இந்த மூவர் தான் முதலிடத்தில் இருக்கின்றனர். இந்திய முழுவதிலும் இருக்கும் ரசிகர்களில் பெரும்பாலானோர் இவர்களை ஃபாலோ செய்கிறார்கள். தற்போது இந்த ரேஸில் விஜய் தேவர்கொண்டா மற்றும் யாஷ் இருவரையும் பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் ஆனார் அல்லு அர்ஜுன். இந்த போட்டி என்ன என்று புரியாமல் குழம்பி இருக்கிறீர்களா. விவரம் உள்ளே.
Just In




தென்னிந்திய சினிமாவின் தொடர் வெற்றி:
தென்னிந்திய சினிமா கடந்த டிசம்பர் 2021 முதல் பாக்ஸ் ஆபிஸில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வெற்றியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அல்லு அர்ஜுன், யாஷ், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் போன்ற பல ஹீரோக்களுக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளனர். இது அவரவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்பவர்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட கணிப்பில் அல்லு அர்ஜுன் நம்பர் ஒன் இடத்தை பிடித்து மற்ற அனைவரையும் பின்னுக்கு தள்ளி விட்டார். அல்லு அர்ஜுனுக்கு அடுத்த இடத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் யாஷ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னுக்கு தள்ளப்பட்ட ஹீரோக்கள்:
இன்ஸ்டாகிராம் கணக்கின் படி அல்லு அர்ஜுன் 18.8 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளார். இவரை அடுத்து விஜய் தேவர்கொண்டாவை 17 மில்லியன் ஃபாலோவர்களுடன் இரண்டாவது இடத்திலும், கேஜிஎஃப் ஹீரோ யாஷ் மற்றும் துல்கர் சல்மான் இருவருக்கும் தலா 11 மில்லியன் ஃபாலோவர்களையும் கொண்டு மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். இவர்களை தொடர்ந்து மகேஷ் பாபு, பிரபாஸ், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் உள்ளனர்.
அடுத்த ப்ராஜெக்ட்களில் பிஸியாகும் நடிகர்கள்:
புஷ்பா 2 படம் மட்டுமின்றி பல ப்ராஜெக்ட்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் அல்லு அர்ஜுன். விஜய் தேவர்கொண்டா நடிக்கும் லிகர் திரைப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜேஜிஎம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். யாஷ் தனது அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.