நாம் பொதுவாக வெளியே சென்றாலும் ,மிகுந்த நேரம் ஒரு வேலையை செய்து கொண்டிருந்தாலும் ,நமது உடம்பானது அதிக அளவில் சோர்வடைந்தால் நம் நினைவுக்கு வருவது காபி, டீ போன்ற பானங்களை நினைவுக்கு வரும் .


பொதுவாகவே லெமன் சோர்வு முடிக்கும் என்பதை பரவலாக நம்பிக் கொண்டிருக்கிறோம். அதுவும் ஒரு சில நேரங்களில் நமக்கு சரியானதாகவே தோன்றுகிறது .ஆனால் லெமன் மற்றும் காபியுடன் சேர்த்து அதை பருகுவதால் உடல் எடை குறையும் என்று வரும் செய்திகளுக்கு எந்த ஒரு உண்மையான ஆதாரங்கள் இதுவரை இல்லை எனக் கூறப்படுகிறது.


நமது உடலானது அதிக அளவில் சோர்வடையும் போது டீ ,காபி போன்ற பானங்களை அருந்துவதால் அதிலுள்ள ஒருவித ரசாயனம் மூளையில் ஒரு சிறிய புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்காகவே நாம் அதிகளவில் காப்பியை டீயை பயன்படுத்துகிறோம்.


 பிளாக் காபி குடித்தால் உடலுக்கு நல்லது அதிக அளவு ஆற்றல் உண்டாகிறது, என்பது எல்லாம் ஒருவிதமான ஆதாரமற்ற செய்தியாகும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக  டீ, காபி இவைகள் கலோரிகளை குறைக்காது .ஆனால் உடல் எடை குறைப்பு மற்றும் உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்காது .


எலுமிச்சை நீரைப் பொறுத்தவரை, அதில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃபோலேட், மினரல்கள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் உப்பு குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள்.காரத்தன்மையுடன் இருப்பதால், இது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. 


இது நீரேற்றமாக இருக்க உதவுகிறது மற்றும் நீர் தக்கவைப்புக்கு ஒரு மாற்று மருந்தாகும். ஆனால் அதை காபியுடன் சேர்த்து பருகினால் ஒருவிதமான கசப்பும் குடிப்பதற்கு பெரும்பாலோனோருக்கு சரியானதாக இருக்காது .இதைப்பற்றி எடை இழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளில் நிபுணத்துவம் பெற்ற ஊட்டச்சத்து நிபுணரும் எழுத்தாளருமான கவிதா தேவ்கன் கூறுகையில், காபி ஆனது கலோரிகளை குறைக்கும் ஆனால் பசியை அடக்கும் . 


நீங்கள்  ஒரு குறைந்த நேரத்தில் குறைந்த பசிக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் டீ, காபி ஒரு சிறந்த பானமாக இருக்கலாம் .அந்த நேரத்தில் தண்ணீரும் அதே அளவு வேலை செய்கிறது. பொதுவாகவே இரவில் கண் முழித்து வேலை செய்பவர் மற்றும் ரொம்ப அதிக அளவில் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் தலைவலி உள்ளவர்கள் டீ ,காபி குடித்தால் அவர்கள் இன்னும் நன்றாக செயல்பட முடியும் என்று நம்புகிறார்கள். 
அதற்கான எந்த ஆதாரமும் இல்லை .


இதுபோல் எழுபது, எண்பதுகளில் மாடல் அழகிகள் டிரேம்பாக்ஸ் செல்லும் முன்பாக காபி அருந்தும் பழக்கம் கொண்டுள்ளனர். ஏனென்றால் காபி குடித்தால் ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று அவர்கள் நம்பினர். இதுவே  நாளடைவில் உணவுப் பழக்கமாக மாறியது.பின்னர் காபி உங்கள் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தை  அதிகரித்தது என்பதைக் காட்ட பல ஆய்வுகள் இருந்தன. 


ஏனென்றால், காஃபின் நரம்பியக்கடத்தியான அடினோசினைத் தடுக்கிறது மற்றும் டோபமைன் போன்ற தூண்டுதல் நரம்பியக்கடத்திகளை அதிகரிக்கிறது. ஆனால் உண்மையில் உங்கள் BMR ஐ அதிகரிக்க, நீங்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 15 கப் வரை அதிக அளவில் காபி குடிக்க வேண்டும். அது நீரிழப்பு தூக்கம் குறைதல் மற்றும் அதிகரித்த பதட்டம் போன்ற எதிர்மறையான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும்.


 உங்கள் உடல் அதிகரிக்கும் கோப்பைகளுக்கு ஏற்றவாறு ஒரு போதை பழக்கத்தை குறிப்பிட தேவையில்லை. நீங்கள் ந உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் சரியான முறையில் அதற்கான வழிகளை பின்பற்றினால், மட்டுமே குறைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.