தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் புஷ்பா - தி ரைஸ் திரைப்படத்திற்கு பிறகு, ஒரு புகழின் உச்சிக்கு சென்ற ஒரு பான் இந்திய நடிகராகிவிட்டார். இதன் மூலம் உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து விட்டார் என்றே சொல்லலாம்.


அல்லு அர்ஜுன் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு அன்பான குடும்ப தலைவரும் கூட. ஷூட்டிங் அல்லது வேறு பணிகள் இல்லாத சமயத்தை தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டவர். 


 



தென் ஆப்பிரிக்காவிற்கு குடும்பத்துடன் பறந்த அல்லு அர்ஜுன் :


கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மனைவியுடன் ஹைதராபாத் விமான நிலையத்தில் நுழையும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ஜோடி தென் ஆப்பிரிக்காவிற்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பறந்து இருக்கிறது. அங்கு சினேகா ரெட்டி மற்றும் அல்லு அர்ஜுன் தென் ஆப்பிரிக்காவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலான நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா ரெட்டி அந்த பிரமாண்டமான திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளது தெரியவந்துள்ளது. 


 






 


புஷ்பா 2 ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் எப்போது ?


புஷ்பா : தி ரூல் திரைப்படம் முதல் பாகமான புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தை விடவும் பிரமாண்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் ஒன்று படத்தின் முதல் புரோமோவாக டிசம்பர் 17ம் தேதி பிரத்யேகமாக வெளியாகவுள்ளது என்ற தகவலை பகிர்ந்துள்ளார் இயக்குநர் சுகுமார். அல்லு அர்ஜுனின் ஒரு நிமிட டெஸ்ட் ஷூட்  வீடியோ ஒன்று வெளியிடப்பட இருக்கிறதாம். 


 






 


ரஷ்யாவில் வெளியாகும் புஷ்பா : தி ரைஸ் :


இன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் அல்லு அர்ஜுன், விரைவில் புஷ்பா 2 படத்தின் டெஸ்ட் ஷூட்டிற்காக பாங்காக் செல்ல உள்ளார். படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. பாங்காக்கில் இருந்து திரும்பிய பிறகு டிசம்பர் மாத இறுதியில் வெளியாக உள்ள புஷ்பா : தி ரைஸ் படத்தின் விளம்பர பணிகளுக்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.