இலவச மின்சாரத்திற்கு  இந்த ஆண்டு 4000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்


அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு :


சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:


சென்னையை பொறுத்தவரையில் 18 இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. பின்னர் அவை சரிசெய்யப்பட்டு சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம், திருவெண்காடு பகுதியில் மின் விநியோகம் 2 மணிநேரம் தடைபட்டது. தற்போது அவை சரி செய்யப்பட்டுள்ளது. கொஞ்சம் மழை பெய்தாலே மின் விநியோகத்தை நிறுத்தும் சூழல் கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்தது. ஆனால், தற்போது மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.


Reservation : 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மறுசீராய்வு மனு - அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு


உயரம் அதிகரிப்பு :


3,700-க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ் ஒரு மீட்டர் அளவுக்கு உயர்த்தபட்டுள்ளதாகவும், வழக்கமான புகார்கள் மட்டுமே மின்னகத்தில் வந்துள்ளது மின்வெட்டு குறித்த புகார்கள் இல்லை  எனவும் குறிப்பிட்டார். 11,200 மெகாவாட் அளவுக்கு தான் நேற்று மின் தேவை ஏற்பட்டுள்ளது. மழை காலம் என்பதால் மின் தேவை குறைந்துள்ளது. கூடுதல் செலவு காரணங்களால் அனல் மின் நிலைய உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது


100 நாட்களுக்குள் 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இலவச மின்சாரத்திற்காக கடந்த 9048 கோடி மானியம் அளிக்கப்பட்டது இந்த ஆண்டு கூடுதலாக 4000 கோடி மானியம் அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


மழைக்காலங்களில் பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்" என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.


Chembarambakkam Lake: இடி, மின்னல்..! அடித்து வெளுக்கும் கனமழை..! செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன?


முன்னதாக, நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்று காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.