பாலிவுட்டின் முக்கிய நடிகைகளுள் ஒருவரானவும் இயக்குநர் மகேஷ் பட்டின் மகளுமான ஆலியா பட்டினை இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தைத் தொடர்ந்து கடந்த மாதம் ஆலியா பட் தான் கருவுற்றிருப்பதாக அறிவித்தார். எனினும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அலியா, பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடித்து கலக்கி வருகிறார். ஆலியா நடித்துள்ள டார்லிங்ஸ் படம் வரும் 5ம் தேதி வெளியாகவுள்ளது. டார்க் காமெடி படமாக உருவாகியுள்ள டார்லிங்க்ஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஆலியா சில சீரியசான விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சினிமா துறையிலும் பல சந்தர்ப்பங்களில் பாலினப் பாகுபாட்டை எதிர்கொள்ள வேண்டியிருந்தது எனக் குறிப்பிட்டுள்ள ஆலியா, சமூகத்தில் நடக்கும் மோசமான விஷயங்களைச் சகித்துக்கொள்ளவே பெண்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார் மேலும் பேசிய அவர், பாலின வேறுபாட்டை, பெண் என்பதால் சொல்லப்படும் பாலியல் ரீதியிலான மறைமுக வார்த்தைகளை நானும் கண்டிருக்கிறேன். பலதடவை அது குறித்த் எனக்கு விழிப்புணர்வே இருந்ததில்லை. இப்போதெல்லாம் மிகவும் கவனமாக இருக்கிறேன். அது அப்படியான, பாலியல் ரீதியிலான கமெண்ட் என எனக்கு இப்போது புரிகிறது. சம்மந்தமே இல்லாமல் இந்த சமூகத்தில் பலர் பேசுவது எனக்கு எரிச்சலைத்தருகிறது. எனது ப்ரா கட்டிலின் மீது கிடக்கக் கூடாது எனக் கூறுகின்றனர். அந்த ப்ராவை மறைத்து வைக்கச் சொல்கிறார்கள். இதில் என்ன இருக்கிறது. ப்ராவும் ஒரு உடைதானே? அது சாதாரண விஷயம். அதை ஏன் மறைக்க வேண்டும்? உங்கள் உள்ளாடையை எங்காவது வெளியே கிடந்தால் நான் எதுவுமே சொல்லமாட்டேன் என்றார்.
சமீபத்தில் இளம் வயதினர்களுக்கு ஆலியா சொன்ன ப்ரீ அட்வைசும் வைரலானது. அதில், நான் எனது 18 வயது காலக்கட்டத்தில் உடல் இப்படி இருக்க வேண்டும், முடி இப்படி இருக்க வேண்டும், சருமம் இப்படி இருக்க வேண்டும் என்று என்னை நானே நிறைய வருத்திக் கொண்டேன். இப்போதுள்ள இளசுகளுக்கு நான் சொல்ல விரும்புவது உடலின் புறத்தோற்றத்துக்கான மெனக்கிடல் என்ற பெயரில் உங்களை நீங்களே ரொம்பவே வருத்திக் கொள்ளாதீர்கள் என்றார்.