ஆல்யா பட் :


ஆல்யா பட் சமீபத்தில் ரன்பீர் கபூரை காதலித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டார். இவர் விரைவில் அம்மாவாக போகிறார் என்பதும் நாம் அறிந்ததுதான் . இந்நிலையில் ஆலியா பட், ஷெபாலி ஷா மற்றும் விஜய் வர்மாவுடன் இணைந்து டார்லிங்ஸ் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.Jasmeet K Reen இயக்கிய இயக்கியுள்ள இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில்  வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட், மற்றும் ஆல்யாவின் எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து டார்லிங்ஸ் திரைப்படத்தை தயாரித்துள்ளது, படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவினை பிரம்மாண்டமாக படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆல்யா பட்டும் கலந்துக்கொண்டார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களின் பல கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்தார்.






பயந்தீர்களா ஆல்யா ?


ஆல்யா தனது சொந்த தயாரிப்பில் எடுக்கும் முதல் படம் டார்லிங்ஸ் . இந்த படத்தில் நடித்துக்கொண்டே , தயாரிப்பதற்கு சிரமமாக இருந்ததா என செய்தியாளர்கள் கேட்ட பொழுது “இல்லை, அப்படியெல்லாம் இல்லை. எனது முதல் படமான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் தர்மா புரொடக்ஷன்ஸுடன் ரெட் சில்லிஸும் ஒரு பகுதியாக இருந்ததற்கு நான் மிகவும் ந நன்றியுடனும் இருக்கிறேன். நான் கவலைப்பட வேண்டிய தேவையை ஷாருக் கான் எனக்கு கொடுக்கவில்லை. ஏனென்றால்  ஷாருக் என் கையை பிடித்து அழைத்து வந்தார். கோவிட் சமயத்தில் நாங்கள் படமெடுத்தோம், எனவே, நெறிமுறைகளின் பட்டியலை நாங்கள் பின்பற்ற வேண்டியிருந்தது. ஒரு நடிகையாக நான் கவனம் செலுத்தினேன் மற்றதை அவர்கள் நிர்வகித்தார்கள். இந்த செயல்பாட்டில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்” எனறார். மேலும் தயாரிப்பாளார் என்பதால் படத்தின் கதை மாற்றம் மற்றும்  நடிகர்கள் தேர்வு எதிலுமே ஆல்யா கவனம் செலுத்தவில்லையாம். அது முழுக்க முழுக்க இயக்குநரின் சாய்ஸ் என்கிறார். படத்தில் ஆல்யா ஒரு இளம் தாயாக நடித்திருக்கிறார். டார்லிங்ஸ் திரைப்படம் ஒரு தாய் - மகள் பாசத்தை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.