திஷா பதானி:
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான லோஃபர் திரைப்படத்தில் வருண் தேஜ்ற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை திஷா பதானி . ஆனாலும் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் 2016 ஆம் ஆண்டு நடித்த MS தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்னும் திரைப்படம்தான் திஷா பதானிற்கான அங்கீகாரத்தை கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு குங் ஃபூ யோகா (2017), பாகி 2 (2018), பாரத் (2019), மலாங் மற்றும் பாகி 3 (2020) மற்றும் ராதே: யுவர் மோஸ்ட் வாண்டட் பாய் (2021) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இவர நடிகர் டைகர் ஷெராஃப்பை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை தனக்கு பிடித்தமான நடிகர் யார் என்பதை நேர்காணல் ஒன்றில் ரிவீல் செய்திருக்கிறார்.
கிரஷ் :
நடிகை திஷா பதானி பள்ளி நாட்களில் தீவிரமான ரன்பீர் கபூரின் ரசிகையாம். அவர்தான் தனது முதல் கிரஸ் என்கிறார். ஒரு முறை திஷா தனது சொந்த ஊரில் ஸ்கூட்டியில் பயணித்துக்கொண்டிருந்தாராம். அப்போது ரன்பீர் கபூரின் விளம்பர பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்ததாம் . அதனை கண்டதும் திஷா போஸ்டரையே வெறித்து பார்த்திருக்கிறார். இதனால் தான் கிட்டத்தட்ட ஒரு விபத்தில் சிக்கியிருப்பேன். ஆனால் தப்பித்துவிட்டேன் என தனது கடந்த கால நினைவுகளை அசைப்போட்டிருக்கிறார். இது ரன்பீர் கபூரிடன் கூறிவிட்டீர்களா என கேட்டதற்கு , “இல்லை..நான் இதுவரையில் பகிர்ந்தது கிடையாது..ஆனால் கண்டிப்பாக சொல்லுவேன்” என்றார்.
மோஹித் சூரி இயக்கிய ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் படத்தில் திஷா தற்போது நடித்து முடித்துள்ளார்.அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரகாம் மற்றும் தாரா சுதாரியா இப்படம் வருகிற ஜூலை 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.