நேற்று வெளியான சீதா ராமம் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹனு ராகவ்புடி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் காதலை கசிந்துருக செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் பணியாற்றிய கடிதத்தை சீதாவிடம் சேர்க்க போராடும் ஒருவராக ராஷ்மிகா. ஏன்? எதற்கு? சிக்கல்கள் என்ன? சவால்கள் என்ன என பல எதிர்பார்ப்புகளை டீசரே உண்டாக்கியது. அதேபோல் காட்சி அமைப்புகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் தமிழ் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் பேசிய துல்கர் ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான படம். மிகப்பெரிய கதை. அழகான கதை. நிச்சயம் அனைவரும் படத்தைப் பாருங்கள். நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடித்துள்ளனர். தமிழுக்கு வரும்போதெல்லாம் ஏன் காதல்கதை என்று கேட்கிறார்கள். மலையாளத்தில்கூட வித்தியாசமான படங்களை கொடுக்கிறீர்கள். தமிழ் என்றால் காதல்தானா என்கிறார்கள். நிச்சயம் அடுத்த முறை காதல்கதையோடு வர மாட்டேன். இப்போது உள்ள இளம் நடிகர்கள் அழகாக காதல்படங்களை கொண்டு வருகிறார்கள். அந்த புதுப்பசங்களைப் பார்த்து நான் லவ் படங்கள் செய்ய கற்றுக்கொள்கிறேன் என்றார்.
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் துல்கர் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து இயக்குநர் ஆர்.பால்கி உருவாக்கிய `சுப்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தின் முதல் டீசர் வெளியானது. `ஹேப்பி பர்த்டே’ பாடலைப் பாடிக் கொண்டே நடிகர் துல்கர் சல்மான் செய்தித்தாள்களை வைத்து மலர்களை செய்வதாகவும், சன்னி தியோல் கதாபாத்திரத்தையும் காட்டும் இந்த டீசரில், படத்தின் தலைப்பின் கீழ் ‘Revenge of the Artist’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 80களின் பிரபலமான பாலிவுட் பாடலான `வக்த் நே கியா க்யா ஹசீம் சிதம்’ பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.
சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியிலான இந்தத் திரைப்படம் பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்படுவதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார் நடிகர் துல்கர் சல்மான். `பால்கி சார் என்னிடம் `சுப்’ படத்தை வழங்கிய போது, நான் அதிர்ச்சியடைந்தேன். `இந்தக் கதாபாத்திரத்தில் என்னை யோசித்து பார்த்தீர்களா? நான் இதுவரை செய்திராத கதாபாத்திரம் இது. வழக்கமானது அல்ல. இது பரிசோதனை படம் என்பதால் நானும் ஆர்வமாக இருக்கிறேன். படம் வெளிவரும் போது, அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள்’ எனக் கூறியிருந்தார்.