நடிகை அலியா பட் தன் கர்ப்ப கால பசியை வெளிப்படுத்தி பகிர்ந்துள்ள க்யூட்டான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
நடிகை ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் எளிமையாகவும் கொண்டாட்டமான முறையிலும் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து சில நாள்களிலேயே தான் கருவுற்றிருப்பதை ஆலியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்தார்.
முன்னதாக தனது நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா பட ப்ரொமோஷன் பணிகளில் ஆலியா தான் கருவுற்றிருந்த நிலையிலும் முழு வீச்சில் பங்கேற்றது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
தற்போது மூன்றாவது கர்ப்ப பருவகாலத்தில் ஆலியா உள்ள நிலையில், முன்னதாக தன் பசியை வெளிப்படுத்தி அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்டோரி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
கர்ப்ப காலத்தில் புளிப்பு, இனிப்பு உள்பட அனைத்து உணவுகளையும் ரசித்தோ ரசிக்காமலோ சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டுமென்ற பெரும் ஆசை ஏற்படும் .
கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பிணிக்கள் பொதுவாக உணவுக்காக ஏங்கும் நிலை ஏற்படும்.
அந்த வகையில், மும்பையில் ”பீட்சா வாங்க சிறந்த கடை எது?” எனக் கேள்வி எழுப்பி தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிம் ஆலியா பகிர்ந்துள்ளார்.
பீட்சா வாங்க நல்ல கடையை தனக்கு பரிந்துரைக்குமாறு கோரி ஆலியா பகிர்ந்துள்ள இந்தப் பதிவு அவரது ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறது.