மும்பையில் நடைபெற்ற பிரம்மாஸ்திரா பட ப்ரோமோஷனுக்கு வந்த நடிகை ஆலியா பட்டின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 






நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூர் - ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா உள்ளிட்ட பலரது நடிப்பில் 
வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் "பிரம்மாஸ்திரா". ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் கரண் ஜோஹரின் தர்மா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. 


செப்டம்பர் 9 ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் உலகளவில் வெளியாகவுள்ளது. சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தின் விளம்பர பணிகளில் மும்மரமாக படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று மும்பையில் நடந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு ரன்பீர் கபூருடன் அவரது நடிகை ஆலியா பட்டும் வந்திருந்தார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது.  


பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.


 






இந்த நிலையில் ஆலியா பட் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “ எங்களது குழந்தை விரைவில் வரவிருக்கிறது” இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார். ஆலியா பட் கால் கடோட் நடிக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் நடிப்பதன் மூலம் ஹாலிவுட்டில் என்ட்ரி ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.