பிரபல நடிகர் கெளதம் கார்த்திக்கும், மலையாள நடிகையான மஞ்சிமா மோகனும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் இந்தாண்டு நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. 


பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய  'கடல்' படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து,  ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ‘மிஸ்டர். சந்திரமெளலி,  ‘ தேவராட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்தாக  ‘பத்து தல’ படம் வெளியாக உள்ளது.  






 


‘தேவராட்டம்’ படத்தில் கெளதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்தார். அந்தப்படத்தில் அறிமுகமான கெளதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் தொடர்ந்து பழகி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காதலர் தின பரிசாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது திருமணம் வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 






 


மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகமானவர் மஞ்சிமா மோகன்.  தமிழில் கெளதம் மேனன் இயக்கிய  “அச்சம் என்பது மடமையடா” படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து “ இப்படை வெல்லும்’, ‘தேவராட்டம்’,  ‘ துக்ளக் தர்பார்’, ‘எஃப்.ஐ.ஆர்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.