பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் அக்‌ஷய் குமார். இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான சவ்கந்த் திரைப்படம் மூலம் அறிமுகமாகினார். இந்தியில் இதுவரை சுமார் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். 


இவர் தமிழில் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்து இருந்தார்.  பக்‌ஷிராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்தனர். இவர் இறுதியாக ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் வெளியான பெல்பாட்டம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இவருக்கு இந்திய அரசாங்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்தது. 


இவரது தாயார் அருணா பாட்டியா சமீபத்தில்  உடல்நலக் குறைவு காரணமாக  அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் செப்டம்பர் 8 ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


அக்‌ஷய் குமார் 'சிண்ட்ரெல்லா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக லண்டன் சென்று இருந்தார். அவரது தாயார் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து உடனடியாக  அக்‌ஷய் குமார் படப்பிடிப்பை பாதியில் நிறுத்துவிட்டு இந்தியா விரைந்தார்.   தனது தயார் குறித்த அடுத்த அறிவிப்பை அக்‌ஷய் குமார் ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு இருந்தார். 


அதில், ”அவர் தான் என் இதயம். நான் சொல்ல முடியாத துயரில் தாங்க முடியாத வேதனையில் தவிக்கிறேன். என் அம்மா அருணா பாட்டியா அமைதியான இந்த முறையில் இந்த உலகை விட்டு பிரிந்தார். 


அவர் நிம்மத்தியாக  என் தந்தை உலகில் இணைந்துவிட்டார். உங்களின் பிரார்த்தனைகளை மதிக்கிறேன் அம்மா” எனப் பதிவிட்டிருந்தார்.






மேலும் இவரது மறைவு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “அக்‌ஷய் குமார் உங்கள் தாயின் மறைவால் நான் வருத்தப்பட்டேன். தாயை இழந்த வலி குறித்து, எனக்கு புரிகிறது. ஆழந்த இரங்கலை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


வாழ்க்கையில், நீங்கள் வெற்றி பெற்றத்தை உங்கள் அம்மா பார்த்திருக்கிறார். தனது அன்பு மகனை இந்தியாவே கொண்டாடுவதை கண்டு அவர் மகிழ்ந்திருப்பார். அவளுடைய நினைவுகளையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து, அவளைப் பெருமைப்படுத்துங்கள். இந்த சோகமான நேரத்தில், என் எண்ணங்கள் உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் உள்ளது” என அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். 


இந்நிலையில் இதுகுறித்து அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ”அம்மாவின் மறைவுக்கு இரங்கல் செய்திகளால் ஆறுதல் அடைந்தேன். நேரம் ஒதுக்கி எனக்கும் என் அம்மாவிற்கும் அன்பான உணர்வுகளை வெளிப்படுத்திய பிரதமருக்கு நன்றி. இந்த ஆறுதலான வார்த்தைகள் என்றென்றும் என்னுடன் இருக்கும்” எனக் குறிப்பிட்டார்.