பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். தமிழில் எந்தரன் 2 படத்தில் , பக்ஷிராஜன் என்னும் கதாபாத்திரத்தில் பிரம்மாண்டமாக நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் பாலிவுட்டில் , சூர்யவம்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் வசூல் வேட்டை நடத்தியது. அதே போல தனுஷ் நடிப்பில் வெளியான கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் மாறுபட்ட கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அப்போது அவரின் வயது குறித்தும் , சக நடிகர்களிடம் வயது வித்தியாசத்தில் நடிப்பது குறித்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு சற்று காட்டமாகவே பதிலளித்த அக்ஷய் குமார் "நான் அதைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. இதுபோன்ற விஷயங்களை இங்குள்ளவர்கள் மட்டுமே சிந்திக்க முடியும். இது வேறு எங்கும் நடக்காது. அது ஹாலிவுட் படங்களாக இருந்தாலும் சரி, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் படமாக இருந்தாலும் சரி. , இந்த வகையான சிந்தனை இங்கு முழுமையாக நிகழ்கிறது." என தெரிவித்திருந்தார்.
தற்போது மாலத்தீவில் தனது குடும்பத்துடன் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் அக்ஷய் குமார், தனது புத்தாண்டை அங்கிருந்தே தொடங்கியிருக்கிறார். காலையில் எழுந்து , கடலுக்கு நடுவில் அமைந்திருக்கும் சுற்றுலா இருப்பிடத்தில் காயத்ரி மந்திரம் சொல்லி , 2022 ஆம் ஆண்டு புதிய விடியலுக்காக சூரியனை நோக்கி வேண்டிக்கொள்கிறார். அந்த வீடியோவை பதிவிட்ட அக்ஷய் குமார் , கேப்ஷனாக “புத்தாண்டும் அதே நானும்..எழுந்து எனது பழைய நண்பரான சூரியனை வாழ்த்தினேன், மேலும் கொரோனா தவிர மற்ற எல்லா விஷயங்களுடனும் எனது 2022 ஐத் தொடங்கியிருக்கிறேன்.அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறேன் ..புத்தாண்டு வாழ்த்துக்கள் “ என குறிப்பிட்டுள்ளார்.