Gold-Silver Rate, 1 jan: இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்.. அதிகரித்த தங்கம் விலை

24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4,885க்கு நேற்று விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 40 ரூபாய் அதிகரித்து கிராம் 4,925 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Continues below advertisement

சென்னையில் ஆபரணத்தங்கம் 22 காரட் கிராமிற்கு ரூபாய் 4,519க்கு நேற்று விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 36,152க்கு விற்கப்பட்டது. 

Continues below advertisement

இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 40 ரூபாய் அதிகரித்து ரூபாய் 4,559க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 320 அதிகரித்து ரூபாய் 36,472க்கு விற்கப்படுகிறது.

அதேபோல, 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4,885க்கு நேற்று விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 40 ரூபாய் அதிகரித்து கிராம் 4,925 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


அதேபோல் சவரன் தங்கம் நேற்று 39,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 320 ரூபாய் அதிகரித்து 39,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி ஒரு கிராம் இன்றைய காலை நிலவரப்படி 66.70 காசுகளுக்கு விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி 800 ரூபாய் அதிகரித்து 66,700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும்.

அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Watch video : ‘உன் கைகள் கோர்த்து...’ - துபாயில் ஜாலியாக சுற்றி புத்தாண்டை கொண்டாடும் நயன் - விக்னேஷ்

Continues below advertisement
Sponsored Links by Taboola