அக்‌ஷய் குமார், ரன்வீன் சிங் , அஜய் தேவ்கன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தயாராகி வரும் திரைப்படம் சூர்யவன்ஷி. மூன்று முக்கிய மற்றும் முன்னணி ஸ்டார்களை ஒரே படத்தில் காட்டும் புதிய முயற்சியில்  இறங்கியுள்ளார் பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிங்கம்' என்ற போலிஸ் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனும்  'சிம்பா' என்ற  போலிஸ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். சூர்யவன்ஷி கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதன்படி படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு , வருகிற நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


 






 


இந்நிலையில் டீசர் காட்சியில் இடம்பெற்ற அயிலா ரே அயிலா (Aila Re Aillaa) என்னும் பாடலுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடிய வீடியோவை ரன்வீர் சிங் மற்றும் அக்‌ஷய் குமார் பகிர்ந்துள்ளார். ஜாலியாக ஆடிய அந்த வீடியோ காட்சிகளில் சில வினோதமான குத்து டான்ஸை ஆடுகின்றனர் இருவரும். 











இது குறித்த வீடியோவை பகிர்ந்த இருவரும் , வார்னிங் ஒன்றையும் கொடுத்துள்ளனர். ”இந்த நடனத்தை ஆடும் பொழுது உங்கள் ஸ்டெப் தவறினால் , உங்கள் எதிர்கால திட்டங்களை பாதிக்கலாம் “ என குறிப்பிட்டுள்ளனர்.  அதனை  நீங்களே வீடியோ பார்த்து புரிந்துக்கொள்ளலாம். சூர்யவன்ஷி திரைப்படம் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய பாலிவுட் திரைப்படங்களுள் ஒன்று. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த படம் வெளியாகவில்லை. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருப்பதால் ஓடிடி வெளியீட்டி வரும் வருமான படக்குழுவுக்கு குறிப்பாக தயாரிப்பு குழுவுக்கு கட்டுப்படியாவதாக தெரியவில்லை.இந்நிலையில் படம் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டிருப்பது நட்சத்திரங்களில் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.