விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை தக்க வைத்திருந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா சீசன் 1. இந்த சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை ரூபாஸ்ரீ நடிக்க, பெரும்பாலான நடிகர் நடிகையர்கள் புதுமுகங்களாகவே இருந்தனர். 


வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா :


பாரதியாக அருணும் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியனும் நடித்த இந்த சீரியல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிகவும் ட்ரெண்டிங் ஜோடிகளாகவும் இருந்தனர். கண்ணம்மாவை சந்தேகப்படும் பாரதி உண்மையை தெரிந்து கொண்டு கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொள்ளும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த பாரதி கண்ணம்மா சீரியல். 


 



ட்ரெண்டிங் ஜோடி :


சீரியலில் லீட் ரோலில் நடித்தவர்கள் மட்டுமின்றி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் பாரதியின் தம்பியாக நடித்தவர் நடிகர் அகிலன் புஷ்பராஜ். அவருக்கு ஜோடியாக கண்மணி நடித்து வந்தார். அகிலன் - கண்மணி ஜோடிகளும் ட்ரெண்டிங் ஜோடிகளாக இருந்து வந்தனர். இவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனி ட்ராக் சீரியலில் கொடுக்கப்பட்டது.


வெள்ளித்திரை வாய்ப்பு :


திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் நன்றாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார் அகிலன் புஷ்பராஜ். அவர் வெளியேறிய பிறகு வரிசையாக கண்மணி, ரோஷினி ஹரிப்ரியன் என ஒவ்வொருவராக சீரியலில் இருந்து விலகினார். ரோஷினி ஹரிப்ரியனுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்க கண்மணிக்கு ஜீ தமிழில் லீட் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்ததால் அவர்கள் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார்கள்.


விஷால் நடிப்பில் வெளியான 'வீரமே வாகை சூடும்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அகிலன் புஷ்பராஜ். அதை தொடர்ந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். மிகவும் பிஸியான ஷெட்யூலில் நடித்து வந்த அகிலன் திடீரென தனக்கு திருமணம் முடிந்து விட்டது என சொல்லி அவரின் திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். 


 



 


அகிலனுக்கு திருமணம் :


அகிலன் புஷ்பராஜ் தனது நீண்ட நாள் காதலியான அக்ஷயா முரளிதரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் லைக்ஸ் அள்ளி வருகின்றன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இனி என்றென்றும் உன்னுடன்... புது வாழ்க்கை ஆரம்பம்" என அழகான பதிவு ஒன்றுடன் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 
 
பாரதி கண்ணம்மா சீசன் 1 நிறைவு பெற்றதும் வேகவேகமாக சீசன் 2 ஒளிபரப்பானது. ஆனால் வந்த வேகத்திலேயே அந்த சீரியல் முடிந்து போனது குறிப்பிடத்தக்கது.