காஞ்சி பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பட்டயப் பயிற்சி விவரம்


கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான காலம் 12 மாதங்கள். மாணவர்‌ சேர்க்கைக்கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி 12வது வகுப்பு தேர்ச்சி ஆகும்.  10, +2 கல்வி முறையில்‌ தேர்ச்சி பெற்ற இளங்கலை பட்டதாரிகள்‌, பத்தாம்‌ வகுப்பு, மூன்றாண்டு பட்டயப் படிப்பு, பிறகு மூன்றாண்டு பட்டப் படிப்பும்‌ முடித்தவர்கள் (10+3+3) ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்கள்‌ இணையவழி மூலம்‌ பெறப்பட்டு மாணவர்‌ சேர்க்கை நடைபெறும்‌.


பெறப்படும்‌ விண்ணப்பங்களை தேர்வு குழுவிற்கு சமர்ப்பித்து தேர்வு செய்யப்படும்‌ மாணவர்கள்‌ சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்‌.


பயிற்சியில்‌ சேருவதற்கு 01.08.2023 அன்று குறைந்தபட்சம்‌ 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்‌. அதிகபட்ச வயது வரம்பு இல்லை.


தாழ்த்தப்பட்ட வகுப்பினர்‌, பழங்குடியினர்‌, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ மற்றும்‌ பின்தங்கிய வகுப்பினர்‌ பற்றிய அத்தாட்சி பெற்ற ஜாதி சான்றிதழ்‌ நகல்‌ கட்டாயமாக விண்ணப்ப மனுவுடன்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌. இல்லையெனில்‌, அந்த விண்ணப்பங்கள்‌ அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு எடுத்துச்‌ செல்லப்பட மாட்டாது.


மாணவர்களின்‌ வருகை பயோ மெட்ரிக் முறையில்‌ பதிவு செய்யப்படும்‌.


கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி நடத்த போதுமான ஆசிரியர்கள்‌ வெளிக்கொணர்வு அடிப்படையில்‌, அதாவது கூட்டுறவுத்‌ துறையில்‌ பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள்‌ மற்றும்‌ கல்லூரிப்‌ பேராசிரியர்கள்‌ மூலமாக நடத்தப்படும்‌.


விண்ணப்பங்கள்‌ விண்ணப்பித்த பிறகு விண்ணப்பதாரர்‌ பரிசீலனை குழுவால்‌ தெரிவிக்கப்படும்‌ தேதியில்‌ அசல்‌ சான்றிதழ்களுடன்‌ நேரில்‌ பரிசீலனை குழு முன்‌ ஆஜராகி அசல்‌ சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னர்‌, பரிசீலனை குழு தகுதியின்‌ அடிப்படையில்‌ பரிசீலித்தபிறகு குழு அனுமதி அளித்த பின்னர்‌ பயிற்சியாளர்கள்‌ சேர்க்கை நடைபெறும்.‌


முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி பயிற்சியாளர்களிடமிருந்து கீழ்க்கண்டுள்ள தலைப்புகளின்படி பயிற்சிக் கட்டணம்‌ வசூலிக்கப்படும்‌.




விண்ணப்பிப்பது எப்படி?


விண்ணப்பதாரர்கள் www.tncuicm.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். செப். 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


மேலும்‌, பதிவேற்றம்‌ செய்த UPI or Challan நகல்‌, விண்ணப்பித்தினை பதிவிறக்கம்‌ செய்து  நகல்‌ எடுக்க வேண்டும். 
விண்ணப்பத்துடன்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்ட சான்றிதழ்களின்‌ நகல்களையும்‌ சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில்‌ நேரில்‌ சமர்ப்பித்து, சம்மந்தப்பட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின்‌ ஒப்புதல்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌ அல்லது பதிவு அஞ்சலில்‌ ஒப்புகை அட்டையுடன்‌ (Registered Post with Acknowledgment) சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.


விண்ணப்ப கட்டணம்‌ மற்றும்‌ பயிற்சி கட்டணம்‌ ஆகியவற்றை இணையத்தளத்தின்‌ வழியாக‌ மட்டுமே செலுத்த வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு வந்த வாசி சாலையில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகலாம்.


விண்ணப்பிப்பது குறித்து அறிய https://tncuicm.com/doc/DCM%20Prospects%202023-24-NEW.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக் கட்டணம், தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பற்றி முழுமையாக அறிய https://www.tncu.tn.gov.in/pdf/DCM_Notification_2023_24.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.