தமிழ் சினிமாவில் "சதுரங்க வேட்டை" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதற்கு பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை என நான்கு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் நான்குமே சூப்பர் டூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் திரைப்படங்கள். இந்த நான்கு படத்திலேயே அறிமுகம் தேவை இல்லாத அளவிற்கு உலகளவில் பிரபலம்  அடைந்தவர். மிக குறுகிய காலத்திலேயே அபார வளர்ச்சி அடைந்த ஒரு டைரக்டர் ஹெச். வினோத் தான். இன்று பிறந்தநாள் காணும் வெற்றி நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 



மும்மரமாக நடைபெறும் AK 61 பணிகள்:


இயக்குனர் ஹெச். வினோத் தற்போது தல அஜித்குமார் நடிப்பில் தற்காலிகமாக "AK 61" என பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அநேகமாக 2023 தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனரின் பிறந்த நாளான இன்று சமூகவலைத்தளங்கள் முழுவதும் பாராட்டுகளாக குவிந்து வருகின்றன. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் வலிமை மற்றும் தற்போது "AK 61" என இப்படங்களை இயக்கியவர் என்பதால் அஜித்குமார் ரசிகர்கள் அனைவரும் தற்போது ஹெச். வினோத் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். 


 






முதல் படத்திலேயே ரசிகர்கள் கிளீன் போல்ட் :


ஹெச். வினோத் தனது முதல் படமான "சதுரங்க வேட்டை" திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளிவராத ஒரு  புதிய கான்செப்ட் உள்ள படத்தை இயக்கி இருந்தார். ஒரு சாதாரண மனிதன் பணித்திற்காக எப்படி எல்லாம் மாறி பின்பு அதனால் சந்திக்கும் பிரச்சனைகளையும் மிக அழகாக படமாக்கியது ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். முதல் படத்தை இயக்குவதற்கு முன்னர் இயக்குனர் பார்த்திபன் மற்றும் இயக்குனர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


அஜித் ஸ்டைலில் உருவான ரீமேக் படம்:


ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் சரியான ஹிட் கொடுத்த திரைப்படம் "நேர்கொண்ட பார்வை". இப்படத்தை இயக்கிய போனி கபூருடன் இணைந்தது இதே கூட்டணியில் ஒரு பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் "வலிமை". அப்படமும் ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. 


 






AK 61 மற்றும் ரிலீஸ் தேதி அப்டேட்:


தற்போது கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வரும் "AK 61" திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிப்பிற்காக இந்த மாதம் பாங்காக் செல்லவுள்ளனர் படக்குழுவினர். சுமார் 21 நாட்கள் அங்கு ஷூட்டிங் முடிக்கப்பட்டு திரும்பியதும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் படத்தின் டைட்டில் குறித்தும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அஜித்குமார் ஜோடியாக மலையாள திரையுலகத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் நடிக்கிறார். மேலும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் பிக் பாஸ் பிரபலம் கவின் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அஜித் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.