நடிகர் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்த ஹெச். வினோத்தின் AK 61 படப்பிடிப்புகள் படிப்படியாக துவங்கி வருகிறது. இப்படமானது திரில்லர் கதைகளத்தை கொண்டு அமையும் என்று சொல்லப்படுகிறது. தற்போது நடிகர் விஜயின் வாரிசு படத்திற்கும் அஜித்தின் AK 61 படத்திற்கும் பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாக மோதிக்கொள்ளும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
AK 61 படக்குழுவினர்கள் திரையரங்க விநியோக உரிமையை பேசி முடித்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. படத்தின் விநியோகஸ்தர்கள் இப்படத்தை தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் ஆகிய விடுமுறை சீசன்களில் படத்தை வெளியிட பரிந்துரைத்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகிவுள்ளது. வரும் தீபாவளிக்கு சர்தார், பிரின்ஸ் ஆகிய படங்கள் வரிசையில் உள்ளது. அதுபோல் டிசம்பர் மாதத்திலும் பல பல படங்கள் வெளியாகவுள்ளதால் அடுத்த ஆப்ஷனை தேடி வந்த படக்குழுவினர்,
வேறு வழியே இல்லாமல் ஜனவரி மாதத்திற்கு படத்தின் வெளியீட்டை தள்ளிப்போட்டுள்ளனர். அதனால் அஜித்தின் 61-வது படம் பொங்கல் அன்று வெளியாகலாம். வாரிசு படமும் பொங்கலில் வெளியாகும் என்பதால் இரு படமும் ஒன்றுடன் ஒன்று வசூல் ரீதியாக மோதிக்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். இந்த தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டால் நிஜமாகாவே இந்த முறை திரை அல்ல திரைகள் தீ பிடிக்கும்.
விஜய் படமும் அஜித் படமும் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில் வெளியானது. இதுவரை 9 முறை இவர்களின் படம் ஒரே நாளில் வெளியாகி அமர்களப்படுத்தியது. 'ஏகே 61' பட வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம், மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியீட்டு தேதியுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.