Ajithkumar: ரியல் மாஸ்! கார் ரேஸ் மைதானத்தில் மிரட்டும் அஜித் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

பிரபல நடிகர் அஜித் கார் பந்தய மைதானத்தில் ரேஸ் கார் ஓட்டும்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். இவர் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடிக்கிறார்.

Continues below advertisement

கார் பந்தய மைதானத்தில் அஜித்:

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு தொடங்கப்பட்ட படம் என்றாலும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆதிக் ரவிச்சந்திரன் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் அஜித்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், அவர் கார் ரேஸ் களத்தில் நிற்கிறார். துபாயில் உள்ள பிரபல கார் ரேஸ் மைதானம் ஒன்றில்  அஜித் பந்தய காரை அசுர வேகத்தில் ஓட்டிய வீடியோ நேற்று வெளியானது. இந்த நிலையில், இன்று அவர் கார் பந்தய மைதானத்தில் நிற்கும் போட்டோ வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பான விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள்:

தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக அவர் வெளிநாடு சென்றுள்ளார்.. விடாமுயற்சி படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு வௌியாகும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியது.

சமீபத்தில்தான் நடிகர் அஜித் திருப்பதிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தற்போது மீண்டும் அவரது புகைப்படங்கள் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. விடாமுயற்சி படம் ஆக்‌ஷன், த்ரில்லர் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், குட் பேட் அக்லி படம் மிகவும் வித்தியாசமான டான் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட படமாக உருவாகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: The GOAT Second Single: வருடும் விஜய் - பவதாரிணி குரல்கள்.. தி கோட் 2வது பாடல் வெளியானது.. யுவன் எமோஷனல் பதிவு!

மேலும் படிக்க: Cinema Headlines: விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் அஜித்.. தி கோட், விடாமுயற்சி அப்டேட்.. சினிமா ரவுண்ட்-அப்!

Continues below advertisement
Sponsored Links by Taboola