தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகர் அஜித்குமார். நடிகராக மட்டுமின்றி புகைப்பட கலைஞர், துப்பாக்கிச் சுடும் வீரர் என பன்முகத் திறன் கொண்டவராக திகழ்கிறார். இவையனைத்தையும் கடந்து அஜித்குமார் அடிப்படையில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தய வீரர் ஆவார்.
விபத்தில் சிக்கிய அஜித்:
நீண்ட வருடங்களாக அதில் இருந்து விலகிய அஜித்குமார் தற்போது மீண்டும் தனது கார் பந்தய களத்திற்கு திரும்பியுள்ளார். துபாயில் நடக்கும் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் என்ற அவரது அணி பங்கேற்க உள்ளது.
இந்த நிலையில், அஜித்குமார் ரேஸிங் பயிற்சிக்காக துபாயில் ஈடுபட்டிருந்தபோது அவரது கார் தடுப்பில் மிக கடுமையாக மோதி விபத்திற்குள்ளாகியது. இதில் அதிர்ஷ்டவசமாக அஜித்குமார் உயிர் தப்பினார். அஜித் இந்த விபத்தில் எப்படி உயிர் தப்பினார்? என்று பிரபல மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் விளக்கம் அளித்துள்ளார்.
உயிர் தப்பியது எப்படி?
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, இந்த ரேஸ் காரில் ஹேன்ஸ் என்ற பாதுகாப்பு அம்சம் இருக்கும். அதாவது, HAND NECK SAFETY SYSTEM உள்ளது. இது ஒரு ரிங் போல இருக்கும். இந்த ரிங் சீட்டில், சீட் பெல்டுடன் இருக்கும். இதுபோன்று விபத்து நடந்தால் தலை, கழுத்தில் அடிபடாமல் இது தடுக்கும். தலையில் காயம், கழுத்து காயம், விப்லாஷ் ஆகியவை ஏற்படாது.
அந்த ஹெல்மெட்டும், இந்த HAND NECK SAFETY SYSTEM உடன் இணைந்திருக்கும். இதனால், தலையில் ஏற்படும் காயம் தவிர்க்கப்படும். மேலும், இந்த ரேஸ் கார்களில் விபத்து ஏற்பட்டால் எளிதில் வெளியில் வருவதற்கு easy ejection என்ற ஒரு அமைப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் தீ விபத்து ஏற்படாமல் இருக்க தீ கட்டுப்பாட்டு ஏற்பாடும் இருக்கும். இந்த காரணங்களால்தான் அஜித்குமார் உயிர் தப்பினார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அஜித் விபத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இருப்பினும். அவர் தற்போது நலமுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.
கார் ரேஸில் தீவிரமாக அஜித்:
நடிகர் அஜித் 2000 காலகட்டங்களில் ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்டார். பின்னர். ரேஸ் பந்தயத்திற்கு தற்காலிக ஓய்வு கொடுத்து தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். இந்த நிலையில், மீண்டும் அஜித் கார் பந்தயத்திற்கு திரும்பியுள்ளார். அஜித்குமார் ஏற்கனவே பார்முலா கார் பந்தயங்கள் பலவற்றில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வராது என்று அறிவிக்கப்பட்டது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சித்திரைத் திருநாள் கொண்டாட்டமாக ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீசாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானது.