அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை பிப்ரவரி 24 ஆம் தேதி  வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் வலிமை திரைப்படம் 2: 58 மணி நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வந்திருக்கிறது.  வெளிநாடுகளில் படம் சென்சார் ஆக சென்சார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிரடியான ப்ரோமா ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவனின் மாஸ் இசையுடன் அதிரடி காட்சிகளுடன் அந்த ப்ரோமா உருவாகியுள்ளது. இணையத்தில் ட்ரெண்டாகி வரும் ப்ரோமாவை அஜித் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் ஷேர் செய்து வருகின்றனர்.






நேர்கொண்ட பார்வையில் இணைந்த அஜித், வினோத் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம், கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல மாற்றங்களை சந்தித்தது. அப்படி இப்படியாக படம் ஒரு வழியாக பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையால் அந்தத் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது.


அதனைத்தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


இது ஒரு புறமிருக்க, அடுத்ததாக வினோத், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப்படத்தில் ஆக்‌ஷன் கம்மியாகவும், வசனங்கள் அதிகமாக இருக்கும் என்று இயக்குநர் வினோத் ஏற்கனவே அறிவித்திருந்தார்.