சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த 28வயதான பெண் வழக்கறிஞர் ஒருவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சென்னை கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கத்தைச் சேர்ந்த பிரபு என்பவரின் நடனப்பள்ளியின் 2019ம் ஆண்டு என்னுடைய தம்பி சேர்ந்தான். அதன் மூலம் பிரபு எனக்கு பழக்கமானார். பின்னர் இருவரும் இன்ஸ்டா மூலம் பேசிக்கொள்வோம். இருவரது இன்ஸ்டா நட்பு பின்னர் காதலாக மாறியது.


2019ம் ஆண்டு டிசம்பரில் பிரபுவின் வளர்ப்பு நாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி அவரது சொகுசுக் காரில் என்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஸ்நாக்ஸ் சாப்பிட்டோம். பின்னர் கூல்ரிங்ஸ் ஒன்றையும் பிரபு கொடுத்தார். அதனைக் குடித்தவுடனேயே நான் மயக்கம் அடைந்தேன். காலையில் கண் விழித்து பார்த்தபோது என் உடை அலங்கோலமாக இருந்தது. நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன் என்பது தெரிந்தது. இது குறித்து பிரபுவிடம் சண்டையிட்டேன். 




அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டோம். இந்த விஷயம் பிரபுவின் தாயாருக்கு தெரியவே அவரும் என்னை அடிக்கடி வரதட்சனை கேட்டு மிரட்டினார். பணமும், நகையும் கேட்டார். பின்னர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நானும் வற்புறுத்தினேன். அதற்கு பதிவு திருமணம் செய்துகொள்ளலாம். அதற்கு ரூ.1 லட்சம் செலவாகும் எனக் கூறினர். நான் கூகுள் பே மூலம் ரூ.80ஆயிரம் அனுப்பினேன். 


பின்னர் சார்பதிவாளர் அலுவகத்தில் நான் காத்திருந்தேன். ஆனால் சில காரணங்களைக்கூறி அருகில் உள்ள கோவிலில் மாலையை மட்டுமே மாற்றிகொண்டோம். பின்னர் நான் கர்ப்பம் ஆனேன். இது குறித்து பிரபுவிடம் கேட்டபோது ரூ.10 லட்சம் பணம், 100 சவரன் நகை வேண்டுமென கட்டாயப்படுத்தினார். அப்போது தான் முறைப்படி திருமணம் செய்வேன் எனக் கூறினார்.




அதுமட்டுமின்றி நாங்கள் தனிமையில் இருந்த வீடியோவை பரப்பிவிடுவேன் என மிரட்டினார். இதனால் என்னை ஏமாற்றிய பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பிரபுவை போலீசார் கைது செய்தனர். தாய் ரேவதியிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண