வலிமை அப்டேட் எப்போ.. தென் கொரிய அஜித் ரசிகரின் வைரல் வீடியோ..!

விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள், இப்படத்தின் தயாரிப்பாளர், படம் சம்பந்தபட்டவர்களை மட்டுமில்லாமல், எங்கெங்கு வெல்லாம், யார், யாரிடமோ ‘வலிமை’ படம் குறித்த அப்டேட் கேட்டு வருகின்றனர்.

Continues below advertisement

கோயில் பூசாரி, யூரோ கால்பந்து போட்டியை தொடர்ந்து, தென் கொரிய அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் கேட்டுள்ளார்.

Continues below advertisement

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம்  ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் காட்சிகள் வெளிநாட்டிலும், இங்கும் படமாக்கப்பட்ட நிலையில், கொரோனா முதல் அலையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. முதல் அலை ஓய்ந்த பிறகு, ஹைதாராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. இரண்டாவது அலையால் மீண்டும் தொடங்கப்பட்ட படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அஜித் தொடர்பான சில காட்சிகளும், ஒரு சண்டைக்காட்சி மட்டுமே படமாக்க இருப்பதால், இன்னும் சில தினங்களில் அதுவும் படமாக்கப்பட்டு விடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மற்ற நடிகர்களின் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் நிலையில், வலிமை குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாததால், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள், இப்படத்தின் தயாரிப்பாளர், படம் சம்பந்தபட்டவர்களை மட்டுமில்லாமல், எங்கெங்கெல்லாம், யார், யாரிடமோ ‘வலிமை’ படம் குறித்த அப்டேட் கேட்டு வருகின்றனர்.


நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம், வலிமை படம் குறித்த அப்டேட்டை கேட்டதற்கு, தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அப்டேட் கிடைக்கும் என்றார் அவர். பின்னர், வானதி வெற்றி பிறகு, அவரிடம் மீண்டும் அது தொடர்பாக கேட்டனர். இதுபோல பலரிடம், பல இடங்களில்  ‘வலிமை’ அப்டேட்களை ரசிகர்கள் கேட்டு வந்ததால், படம் குறித்த அப்பேட் சரியான நேரத்தில் வரும் என்றும், அதுவரைக்கும் ரசிகர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு அறிக்கையின் மூலம் அஜித் கூறினார். ஆனால், எதையும் கேட்காத மனநிலையில் அஜித் ரசிகர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில், கோயில் பூசாரிகளிடம் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள். அதுதொடர்பான வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இதேபோல், இந்தியா - நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி, யூரோ கால்பந்து போட்டி என எங்கு பார்த்தாலும், வலிமை அப்டேட் எப்போ என்றே கேட்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

தற்போது, தென்கொரிய அஜித் ரசிகர் ஒருவர்,  “வலிமை அப்டேட் எப்போ” என்று கேட்டுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகமல் இருக்கும் நிலையில், அதுதொடர்பான செய்திகள் வெளியாகி படத்தை பற்றி பேசுவது, ஒரு வகை விளம்பர யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக, வரும் 15-ஆம் தேதி வலிமை பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola