நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகிய படம் வலிமை. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரண்டரை ஆண்டுகள் படப்பிடிப்பில் இருந்த இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு யூ டியூப் விமர்சகர்கள் பலரும் கலவையான விமர்சனங்கள் அளித்தபோதிலும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வலிமை பிளாக்பஸ்டர் ஹிட்டாக உருவெடுத்தது.
வலிமை படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூரும், ஜூ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில், வலிமை திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் எப்போது வெளியாகும் என்று இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வலிமை திரைப்படம் வரும் 25-ந் தேதி முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது. வலிமை அறிவிப்பை முன்னிட்டு சென்னையின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான நந்தனம் மைதானத்தில் 10 ஆயிரம் சதுர அடி அளவிலான வலிமை படத்தின் பிரம்மாண்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரைச் சுற்றிலும் அஜித் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
வலிமை படத்தின் ஓடிடி அறிவிப்பை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அருமையான சமூக கருத்துடன் வெளியாகிய வலிமை திரைப்படம் பல சோதனைகளை கடந்து திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், உலகம் முழுவதும் வெளியான அஜித்தின் திரைப்படமான வலிமை 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது, இதைபார்த்து குஷியான அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் வலிமை திரைப்படத்தை டிரென்ட் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்