பேய் வேடமுட்டு மக்களைப் பயமுத்துவதுப்போன்ற டிக் டாக் வீடியோவை நடிகர் மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
மதுவிற்கு அடுத்தப்படியாக இளைஞர்கள் அதிகளவில் மோகம் கொண்டிருப்பது டிக்டாக்கில் தான். டிக்டாக் டூயின் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து இந்தியாவிலும் படிப்படியாக கால் ஊன்றியது. குறிப்பாக டிக்டாக் செயலியைப் பயன்படுத்தி தங்களுடைய திறமைகளை நடனங்கள், பாடல், காமெடி போன்றவற்றின் வாயிலாக வெளிப்படுத்தத் தொடங்கினர். இதனையடுத்து பலருக்கு சினிமா மற்றும் குறும்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியது.
இந்த வீடியோக்களை எடுப்பதற்காக பலர் மெனக்கெட்டு பல விஷயங்களை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் டிக் டாக் செயலியின் மூலமாக ஆபாசமாக நடன அசைவுகள் இருப்பதற்காகவும், சமூகச் சீரழிவிற்கு வழிவகுப்பதாகவும் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ஸில் வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான், ஒரு சிலர் முன்பு எடுத்த டிக்டாக் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுவரும் நிலையில், பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோவைத் தான் நடிகர் மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, வேடிக்கையானக் காட்சிகளை எழுதியிருக்க முடியாது எனவும் கடைசி வரை பார்க்கவும் என கேப்சனோடு பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் வெள்ளை நிற உடை அணிந்த பேய்கள் தெருவில் வரும் அனைவரையும் பயமுறுத்துவதுப்போன்று ஆரம்பித்திருக்கும். ஒவ்வொருவருமாக பயந்து போய் தண்ணீரில் விழுந்து விடுகிறார்கள்.. இறுதியில் டிக்டாக் வீடியோவிற்காகப் பேய் உடை அணிந்தவரும் தவறி தண்ணீரில் விழுந்தவுடன் வீடியோ நிறைவடைகிறது. மற்றவர்களைப் பயமுறுத்தவேண்டும் என்று செய்த ப்ராங்க் வீடியோவில் பேய்க்கே அதே நிலையா? என இன்ஸ்டாவில் வீடியோவைப்பார்த்த ரசிகர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். இதோடு மேடி ப்ரோ, நீங்க வேற வெலல் எனவும், இந்த வீடியோவின் கடைசி காட்சி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது என்பது போன்ற கருத்துக்களுடன் பல இமோஜிகளையும் பதிவிட்டுள்ளனர்.