Vidaamuyarchi First Review: முதல் முறையாக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்க கூடிய படம் தான் விடாமுயற்சி. ஏற்கனவே ஹாலிவுட் படமான பிரேக்டவுன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிற தகவல் வெளியான நிலையில், பிரேக்டவுன் படத்தை பார்த்த ரசிகர்கள் விடாமுயற்சியின் டீசரை வைத்தே படம் எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணித்து விட்டனர்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் காட்சிகளை மையப்படுத்திய 'விடாமுயற்சி' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜூன், ரெஜினா கஸாண்ட்ரா, ரம்யா சுப்பிரமணியன், ஆரவ் என்று பலரும் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ஏற்கனவே விடாமுயற்சி படத்தில் இடம் பெற்ற சவடீகா மற்றும் பத்திக்கிச்சு ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது தனியே என்ற பாடல் லிரிக் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. மனைவியை பிரிந்து தவிக்கும் அஜித் எமோஷனலாக பாடும் பாடல் இது. இந்தப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார். மோகன் ராஜன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.
கிட்டத்தட்ட ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பொங்கல் பண்டிகையிலிருந்து விலகி பிப்ரவரி 6ஆம் தேதி, அதாவது நாளை திரைக்கு வருகிறது. நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்தப் படம், அமெரிக்காவில் இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு வெளியாகும் விடாமுயற்சி கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் ஷோ திரையிடப்படுகிறது.
விடாமுயற்சி படமானது இந்தியா முழுவதும் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக ரூ.17 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 6000க்கும் அதிகமான திரையரங்களில் விடாமுயற்சி திரையிடப்படுகிறது. அர்ஜூன் (அஜித் குமார்) தன்னுடைய மனைவி கயல் (த்ரிஷா) உடன் ஆழமான காதலை வெளிப்படுத்துகிறார். அப்படியிருக்கும் போது ஒரு கட்டத்தில் அஜர்பைஜானில் உள்ள மோசமான டான் டீமால் கயல் கடத்தப்படுகிறார். மனைவியை பிரிந்த கணவர் எப்படி தன்னுடைய மனைவியை தேடி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தோட மீதி கதையாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் தான் விடாமுயற்சி படத்தோட முதல் விமர்சனம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை சென்சாரில் பார்த்தவர்கள் தான் இப்படத்தின் முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளனர். விடாமுயற்சி படம் எப்படியிருக்கிறது என்று பார்க்கையில், படம் ஒரு வகையில் ரசிகர்களை டென்ஷானின் எல்லைக்கே கொண்டும் செல்லும் விதத்தில் உள்ளதாம். காரணம் நொடிக்கு நொடி என்ன நடக்க போகிறது... என்பதை கணிக்க முடியாத கட்சிகளோடு இயக்குனர் மகிழ் திருமேனி காட்சி படுத்தியுள்ளார்.
அதே போல் மனைவியை பிரிந்த கணவன் விரக்தியில் எப்படியெல்லாம் இருப்பார் என்பதை புத்திச்சாலித்தனமாக, பெரிதாக எந்த ஒரு ஹீரோயிசமும் இல்லாமல் காட்டியிருக்கிறார். கதைக்கான அழுத்தத்தை அஜித் தன்னுடைய நடிப்பின் மூலம் நிரூபித்துள்ளதாக கூறப்படுகிறது. மர்மமான முறையில் அர்ஜூனின் மனைவி காணாமல் போய்கிறார். அதன் பிறகு ஒவ்வொரு காட்சியும் ஆபத்துகளை முன் வைத்தே நகர்கிறது. இதையடுத்து படத்தில் இருக்கும் டுவிஸ்ட் பார்வையாளர்களை எங்கும் நகர விடாமல் செய்கிறது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வரை ஒரே பரபரப்பு த்ரில்லர் தான். இப்படிப்பட்ட படத்தில் அஜித் தன்னுடைய நடிப்பை மீண்டும் புதுப்பித்து காட்டியிருக்கிறார். விடாமுயற்சி அஜித்தின் கிளாசிக் மேஜிக் அனுபவத்தை காட்டுகிறது. மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்துள்ளார் என கூறுகிறார்கள்.