அஜித்-விஜய் என்கிற போட்டியில் தொடங்கி, இன்று தல-தளபதி போட்டியாக உருமாறியிருக்கிறது களம். 1996ல் தொடங்கிய போட்டி யுத்தம், 2023 வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், இப்போது அஜித்-விஜய் என்கிற போட்டி, இன்னும் பலமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் இரு ஓப்பன் பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ், அஜித் மற்றும் விஜய். இவர்களின் படம் வெளியாகும் நாள், தியேட்டர்களில் அசூட வேட்டை இருக்கும். அதே நேரத்தில் இருவரின் படமும் ஒரே நேரத்தில் வெளியானால், அந்த வேட்டை சூறாவளியாகவே இருக்கும். கடைசி மோதலின் படி, ஜில்லாவை முந்தி வீரம் ரேஸில் முதலில் நிற்கிறது. ஆனால், ஒரு படத்தை வைத்து, அல்லது ஒரு மோதலை வைத்து யாருடைய பலத்தையும் எடை போட முடியாது. 

Continues below advertisement

ஹிட் அடித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் அஜித். பெரிய பட்ஜெட் என்பதால் வெற்றியை தேடித்தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விஜய். அப்படி இரு இக்கட்டான சூழலில் வெளியாகிறது துணிவு மற்றும் வாரிசு. இது அடுத்த ஆண்டு வரும் பொங்கல் ரிலீஸ் தான் என்றாலும், இன்றே பரபரப்பை தொடங்கியிருக்கிறது. அப்படியென்றால் அவர்களின் நேருக்கு நேர் மோதல் எப்படி இருந்திருக்கும் என்பதை கொஞ்சம் பின்நோக்கி பார்க்கலாம். 

 

வரிசை அஜித் விஜய் ஆண்டு
1 வான்மதி கோயமுத்தூர் மாப்பிள்ளை 1996
2 கல்லூரி வாசல் பூவே உனக்காக 1996
3 ரெட்டை ஜடை வயசு காதலுக்கு மரியாதை 1997
4 உன்னிடத்தில் என்னை  கொடுத்தேன் நிலாவே வா 1998
5 உன்னைத் தேடி துள்ளாத மனமும் துள்ளும் 1999
6 உன்னைக் கொடு என்னைத் தருவேன் குஷி 2000
7 தீனா ப்ரெண்ட்ஸ் 2001
8 வில்லன் பகவதி 2002
9 ஆஞ்சநேயா திருமலை 2003
10 பரமசிவன் ஆதி 2006
11 ஆழ்வார் போக்கிரி 2007
12 வீரம் ஜில்லா 2014
13 துணிவு வாரிசு 2023

 

துணிவு:

 

 

வாரிசு: