துணிவு


நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகர் அஜித் ஆகியோர் கூட்டணியில் வெளியான படம் “துணிவு”. இந்த படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். துணிவு படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. 


துணிவு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றிய நிலையில் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் என்பது போல நீண்ட நாட்களுக்குப் பின் அஜித் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கும் விதமாக துணிவு படம் அமைந்துள்ளது. மேலும் வசூலிலும் துணிவு படம் சாதனைப் படைத்தது. 


சுற்றுப்பயணத்தில் அஜித்


இந்த படத்தின் வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் அஜித், அதனை கொண்டாடும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அவரது மனைவி ஷாலினி போர்ச்சுகிசில் இருந்து அஜித்தின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அஜித் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கங் என்ற நகரில் தங்கி உள்ளார். இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் அதே பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். 






இந்த நிலையில், அஜித் ஸ்காட்லாந்தில் இருப்பதை அறிந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ரசிகர், அவரை சந்திப்பதற்காக 1 கி.மீ ஓடியதாகவும், பின்பு 15 நிமிடங்கள் அவரை கிளாஸ்கங் நகரில் தேடி, காஃபி ஷாப் ஒன்றில் அவரை கண்டுபிடித்தாகவும் பதிவு செய்துள்ளார்.


அறிவுரை கூறிய அஜித்


அவரை பார்த்தாலும், அவரிடன் சென்று பேச தயக்கமாக இருந்த நிலையில், அவரே அழைத்து தங்களிடம் ஐந்து நிமிடம் பேசியது மட்டுமின்றி, புகைப்படங்களை எடுத்துக் கொண்டதாக  தஞ்சாவூரைச் சேர்ந்த ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அஜித் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லிவிட்டு போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


அடுத்த அப்டேட் எப்போ?


இதனை தொடர்ந்து, அஜித்திடம் அப்டேட் எதாவது இருக்கா தல என ரசிகர் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அஜித், இப்போ பிரேக் வேணும்ப்பா என்று சொல்லியதாக கூறப்படுகிறது.






மேலும், பெரிய நடிகர் என்று பந்தா இல்லாமல் ஜாலியாக தங்களுடன் உரையாடியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் துணிவு படம் நல்லா இருந்தது என்று அஜித்திடம் ரசிகர்கள் சொல்ல, அதற்கு 'நல்ல இருந்துதா..ஓகே நன்றி பா’ என்று சொன்னதாக தஞ்சையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவும், அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.