நன்றாக ஆடிய லபுஷேனின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சைகை செய்த அஸ்வினின் மைண்ட் கேம் பலரை ஈர்த்தது.


நிலைத்து ஆடிய லபுஷேன்


2 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்தி அதகளமான தொடக்கம் தந்த வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சூழல் குழு உதவும் என்று நினைத்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான நாக்பூர் டெஸ்டின் முதல் நாளில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேன் சீராக விளையாட, ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் தேவையான பார்ட்னர்ஷிப் உருவானது. ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் அடங்கிய இந்திய சுழற்பந்து குழுவிற்கு எதிராக இரு வீரர்களும் துணிச்சலாகப் போராடினர். மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் இணைந்து 22 ஓவர்கள் வீசியும் முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை வேறு விக்கெட் வீழ்த்த முடியவில்லை. 76/2 ரன்களை எட்டி ஓரளவுக்கு தேறியது.



மைண்ட் கேம் ஆடிய அஷ்வின்


இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே சூழலுக்கு உதவும் என்று பெரிதும் பேசப்பட்ட நாக்பூர் ஆடுகளம் ஓரிரு முறை தவிர பெரிதாக அச்சுறுத்தவில்லை. ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில், ஸ்மித் ஒரு பந்தில் தைரியமாக கிரீஸில் இருந்து வெளியேறி இறங்கியெல்லாம் ஆடத்துவங்கினார். அதே சமயம் அஷ்வினின் ஒரு குறிப்பிட்ட பந்தை லபுஷேன் இறங்கி வந்து ஆடினார். இது சரிப்பட்டு வராது என்று முடிவு செய்த அஸ்வின் தனது தந்திரங்களை அவிழ்க்கத் துவங்கினார். கையால் சைகை செய்து, ஸ்பின் செய்யப்போகிறேன் என்று கிட்டத்தட்ட எச்சரிக்கையாக விடுத்தார் அஸ்வின்.


தொடர்புடைய செய்திகள்: Ravindra Jadeja Controversy: ஜடேஜா விரலில் தேய்ப்பது என்ன? சர்ச்சையை கிளப்பிய ஆஸ்திரேலிய ஊடகங்கள்!


சைகை பேச்சு


விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத்தைப் பார்த்து பேசுவதுபோல, ஆள்காட்டி விரலைச் சுற்றி சைகை காண்பித்து, மறைமுகமாக லபுஷேனிற்கு செய்தி கூற, பதிலுக்கு லபுஷேனும் அவரை பார்த்து பேட்டை வீசுவதுபோல, அதையும் அடிப்பேன் என்று சைகை செய்தார். அஸ்வின் எதிர்பார்த்தது போலவே, அவர் லபுஷேனின் கவனத்தை திசை திரும்பிவிட்டார். இந்தியாவில் லபுஷேன் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆன அவர், இந்தியாவில் பேட் செய்ய நீண்ட காலமாக தயாராகி வந்த நிலையில், அவருடைய விக்கெட் இவ்வளவு சிறப்பாக அமைந்ததற்கு அவரே கூட பெருமைப்படுவார், அந்த அளவுக்கு அவரது கவனத்தையெல்லாம் திருப்பிதான் அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டி இருந்தது.






விக்கெட்டை எடுத்த ஜடேஜா


முதல் அமர்வின் முடிவில், லாபுஷாக்னே 110 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் லபுஷேனின் ஆட்டம் நன்றாகவே இருந்தது. ஸ்லிப்பில் விராட் கோலிக்கு ஸ்மித் ஒருமுறை கேட்ச் கொடுத்திருந்தாலும், லபுஷேன் சிறு பிசிறு கூட இல்லாமல் நேர்த்தியாக ஆடி எட்டு பவுண்டரிகளை அடித்தார். மதிய உணவிற்குப் பிறகு சிறிது நேரத்திலேயே லபுஷேனின் ஆட்டம் முடிவுக்கு வந்தது, ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை தூக்கினார். ஜடேஜா முதலில் 49 ரன்களில் லபுஷேனை ஸ்டம்பிங் முறையில் அவுட்டாக்கினார். கே.எஸ்.பரத் ஒரு அற்புதமான ஸ்டம்பிங்கை வேகமாக செய்தது பலருக்கும் தோனியை ஞாபகப்படுத்தியது. பின்னர் அடுத்த பந்தே மேத்யூ ரென்ஷாவை எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட் ஆக்கினார். இந்த இன்னிங்சில் ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.