தென்னிந்திய திரையுலகில் ஆக்ஷன் கிங் என்ற அடையாளத்துடன் வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். அவரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குணச்சித்திர நடிகர் மற்றும் இயக்குநரான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் 10ம் தேதி அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 


Ajith daughter Anoushka : தேவதைபோல் வந்த அஜித் மகள்... பல பிரபலங்கள் கலந்துகொண்ட அர்ஜுன் மகள் திருமணம்... வைரல் புகைப்படம்


அதை தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் லீலா பேலஸில் ஐஸ்வர்யா - உமாபதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 


தமிழகத்தை சேர்ந்த முக்கியமான பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 



தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தொல் திருமாவளவன், ஜி.கே. வாசன், துரை வைகோ, டிடிவி தினகரன், ஆர்.கே. செல்வமணி, ரோஜா, குஷ்பூ, சுந்தர்.சி, மோகன், பிரபு,  உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 



அந்த வகையில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியின் மகள் அனுஷ்கா அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் ஷாலினியுடன் கலந்து கொண்டார். சிறிதும் மேக்கப் இன்றி எலகண்ட் லுக்கில் இருந்த அனுஷ்கா அனைவரின் கவனத்தையும் பெற்றார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது. 



தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி, 2017ம் ஆண்டு வெளியான 'அதாகப்பட்டது மகாஜனங்களே' திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து மணியார் குடும்பம், திருமணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஷால் ஜோடியாக 'பட்டத்து யானை' படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா ஒன்று இரண்டு தமிழ் மற்றும் கன்னட படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதற்கு பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் நடிப்பதில் இருந்து விலகினார். 



ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகர் உமாபதி. அந்த சமயத்தில் ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எளிமையான முறையில் ஐஸ்வர்யா - உமாபதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது திருமணமும், வரவேற்பு நிகழ்ச்சியும் மிகவும் விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது.