தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரசிக்கப்பட்டு கொண்டாடித் தீர்க்கப்படும் தம்பதிகளில் ஒன்று அஜித் - ஷாலினி ஜோடி.




கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், தன் திரைப்பயணம் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும், தன் குடும்பத்துக்காக செலவிடும் நேரத்தாலும் ரசிகர்களை ஈர்த்து தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.


அஜித் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ள நிலையில், தங்களது க்யூட்டான குடும்ப புகைப்படங்களை ஷாலினி தன் இணைய பக்கங்களில் சமீப காலமாகப் பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில், அஜித் - ஷாலினி தம்பதி தங்கள் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடி புகைப்படம் பகிர்ந்துள்ளனர். சமீப காலமாக அஜித்தின் மகன் ஆத்விக் ஃபுட்பால் விளையாட்டில் பெரும் ஆர்வம் காண்பித்து வரும் நிலையில், அவருக்கு கோல்டன் ஃபுட்பால் போன்ற கேக் ஒன்றை வெட்டி ஊக்குவித்துள்ளனர் அஜித் - ஷாலினி தம்பதி.




இந்தப் புகைப்படங்களை ஷாலினி தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இணையவாசிகள்  இந்த ஃபோட்டோக்களுக்கு இதயங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.