விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கும் தற்காலிக படமான ‘ஏகே 62’(AK62) என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய வேடத்தில் வடிவேலுவும் நடிக்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதுகுறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட லைகா நிறுவனம், “அஜித் குமாரின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும். இந்தப்படம் அடுத்த வருடத்தின் மத்தியில் வெளியாகும்” என்று கூறப்பட்டுள்ளது.


தற்போது, இந்த படத்திற்கு அஜித்தின் சம்பளமாக(Ajith Salary) லைகா தயாரிப்பு நிறுவனம் 105 கோடி ரூபாய் கொடுக்கப் போவதாக ஒரு புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அஜித் 100 கோடி ரூபாய் கேட்டதாகவும், அதற்கு லைகா நிறுவனம் மேலும் 5 கோடி ரூபாய் சேர்த்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 


அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘அதாரு அதாரு’ பாடல், வலிமையில் ‘நாங்க வேற மாதிரி’ ‘அம்மா’ உள்ளிட்ட பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்தத்தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் “காத்து வாத்துல இரண்டு காதல்” படத்தை இயக்கி வருகிறார். 




அஜித் இப்போது கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார், மேலும் அவரது நடிப்பில் சமீபத்திய வெளியான ‘வலிமை’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அவர் இப்போது எச் வினோத் இயக்கத்தில் 'ஏகே 61' என்ற தற்காலிக தலைப்பில் தனது அடுத்த படப்பிடிப்பில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து இவர்கள் இணையும் மூன்றாவது படம் இதுவாகும். ‘ஏகே 61’ படத்திற்கான அஜித்தின் தோற்றமும் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் நடைபெறுவதாக இருந்தது.


‘ஏகே 61’ படத்துக்குப் பிறகு, இந்த ஆண்டு இறுதியில் ‘ஏகே 62’ படத்திற்கான ஷெட்யூலைத் தொடங்கவுள்ளார் அஜித். படம் 2023 கோடையில் வெளியாகும் என்றும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் விரைவில் அடுத்தடுத்த மாதங்களில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண