த்ரிஷா இல்லைன்னா திவ்யா என்றெல்லாம் அவரது ரசிகர்களை அவ்வளவு சீக்கிரம் செட்டில் ஆகிவிட மாட்டார்கள். அதனால் தான் 20 ஆண்டுகளாக இண்டஸ்ட்ரியில் தனக்கென்று ஒரு தனியிடம் வைத்துக் கொண்டு உலா வருகிறார் த்ரிஷா. நகைக்கடை விளம்பரத்தில் நச்சென்று வரும் த்ரிஷாவைக் கொண்டாட த்ரிஷா ஆர்மி இருப்பதற்கு அவரது அழகு மட்டுமே காரணமில்லை. அந்த அழகுக்குள் பொதிந்திருக்கும் திறமை. 


தமிழ் சினிமா உருவாக்கி வைத்துள்ள 'லூசுப் பெண்' ஃபார்மட்டிலும் சம்திங் சம்திங் என்று நடிப்பார். 96லும் அழுத்தமாக நடிப்பார் த்ரிஷா. விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற ரொமாண்டிக் படங்களுக்கும் அவர் கச்சிதமாகப் பொருந்துவார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனுக்கு த்ரிஷாவை கூட்டிச் சென்றதும் அவரது வெர்சடாலிட்டி தான்.


அதனாலேயே த்ரிஷா ரசிகர்கள் மனதில் இங்கே என்ன சொல்லுது.. ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா என்று இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


இப்படி 20 ஆண்டுகளாக ஜிகினா உலகில் ஜொலிக்கும் த்ரிஷா தனது திரைப் பயணத்தை அண்மையில் கொண்டாடியுள்ளார். கேக் வெட்டி கொண்டாட அவர் தேர்வு செய்த இடம் மெக்சிகோ.


மெக்சிகோ என்றவுடனேயே பீச்சும், கிட்டார் இசையும், குதூகலமும் நம் மனதிற்குள் படமாகச் செல்கிறதல்லவா. அப்படியே த்ரிஷா பகிர்ந்துள்ள இந்த ட்விட்டர் வீடியோவையும் பார்த்துவிடுங்கள். இன்னும் குதூகலமாகி விடுவீர்கள்.


பொன்னியின் செல்வன் மட்டுமல்ல த்ரிஷா நடிப்பில் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன.






 


தற்போது திரிஷா மெக்சிகோ சென்றிருக்கிறார். அங்கு நண்பர்களுடன் ஜாலியாக வலம் வரும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.


மவுனம் பேசியதே முதல் பொன்னியின் செல்வன் வரை..


2002ல் வெளிவந்த மவுனம் பேசியதே தான் இவரது முதல் படம். அவர் அதற்கு முன்பு லேசா லேசா, உனக்கு 20, எனக்கு 18 ஆகிய படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால் அவை தாமதமாக ரிலீஸ் ஆனதால் மவுனம் பேசியதே படம் தான் த்ரிஷாவின் முதல் படம் என அமைந்துவிட்டது.  மவுனம் பேசியது ரிலீஸிற்கு முன்பே அவர் ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் தலையைக் காட்டியிருப்பார்.


அதன் பிறகு சாமி, கில்லி, திருப்பாச்சி என படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் புது உயரத்திற்கே சென்றார் த்ரிஷா. அதே சமயத்தில் தெலுங்கிலும் அறிமுகம் ஆகி முன்னணி நடிகையாக வலம் வந்தார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.


விஜய், அஜித், ரஜினி, கமல், மாதவன், விஷால், விக்ரம், சூர்யா தெலுங்கில் பிரபாஸ், மகேஷ் பாபு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துவிட்டார் த்ரிஷா. அவர் சினிமாவில் நடிக்கவந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டது, தற்போதும் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.