Valimai Movie Poster | வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மீண்டும் மாற்றம் - வருத்தத்தில் ரசிகர்கள்..
அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளிவர இருந்த வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தேதியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

H. வினோத் இயக்கத்தில் தல அஜித் மற்றும் ஹுமா குரேஷி நடிப்பில் உருவாகி வரும் படம்தான் வலிமை. பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகின்றார். "சதுரங்க வேட்டை", "தீரன் அதிகாரம் ஒன்று" ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வினோத், பாலிவுட் உலகத்தை கலக்கிய பிங்க் திரைப்படத்தை அஜித்துடன் இணைந்து "நேர்கொண்ட பார்வை" என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்.
Just In
2019-ஆம் ஆண்டு அந்த திரைப்படம் வெளியான நேரத்தில், தான் மீண்டும் வினோத் - அஜித் கூட்டணியில் அடுத்த படத்தை எடுக்கவிருப்பதாக அப்போதே போனி கபூர் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களில் "வலிமை" படத்திற்கான Pre Production பணிகள் தொடங்கின. ஏறத்தாழ 2 ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அஜித் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். வலிமை நடத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட உள்ளதாகவும், அதற்காக அந்நாட்டு அனுமதிக்கு படக்குழு விண்ணப்பித்துள்ளது என்று அப்டேட்கள் வந்த வண்ணம் இருந்தன .

#Valimai #AjithKumar @ZeeStudios_ @BayViewProjOffl #Vinoth #Niravshah @SureshChandraa @thisisysr @dhilipaction @DoneChannel1 pic.twitter.com/5Is8C3gFHO
— Boney Kapoor (@BoneyKapoor) April 23, 2021

இந்நிலையில் , மே 1 அஜித்தின் 50-வது பிறந்தநாள் எப்படியாவது வலிமை அப்டேட் வந்துவிடும் என்று ரசிகர் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் , தேசத்தில் அனைவரும் பொருளாதாரத்தை இழந்து, உறவினர்களை இழந்து நிற்கும் இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று ஒட்டுமொத்த படக்குழுவும் இணைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தள்ளிவைத்துவிட்டனர் . இது மொத்த படக்குழுவும் இணைந்து எடுத்த முடிவு என்று படத்தின் உரிமையாளர் போனி கபூர் தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த முடிவை பலரும் பாராட்டி வந்தாலும் ரசிகர்களிடம் சற்று வருத்தத்தையும் இந்த முடிவு அளித்துள்ளது .வலிமை அப்டேட்டுக்காக மீண்டும் காத்திருப்போம் .