ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது. 


யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்தனர்.  





இந்தநிலையில், கடந்த பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக படம் வெளியிடப்படும் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், படம் எப்பொழுது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் வலிமை ரிலீஸ்  தொடர்பாக படக்குழு தீவிரமாக யோசித்து வருவதாகவும் ஆர் ஆர் ஆர் டெக்னிக்கை கையில் எடுத்திருப்பதாகவும் தெரிகிறது. 


ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருந்த ஆர் ஆர் ஆர் திரைப்படமும் கொரோனாவால் தள்ளிப்போனது. இப்போது மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28ல் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த நேரத்து நிலைமைக்கு ஏற்ப ரிலீஸாகும் என தெரிகிறது. அதேபோல வலிமை படக்குழுவும் இரு தேதிகளை டிக் அடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 25ம் தேதி அல்லது மார்ச் 4ம் தேதி வலிமை வெளியாகலாம் என கூறப்படுகிறது. பிப்ரவரி பாதியில் கொரோனா இறங்குமுகத்தில் இருக்கும் என்பதாக் பிப்ரவரி கடைசி என்பது சரியாக இருக்குமென கூறப்படுகிறது. 




அது தவறினால் அதற்கு அடுத்த வாரமான மார்ச் தொடக்கத்தில் வலிமை வெளியாகும் என கூறப்படுகிறது. அதேவேளையில் படத்தை மேலும் தாமதமாக்கவும் முடியாது. பீஸ்ட், கேஜிஎப், ஆர் ஆர் ஆர், விக்ரம் போன்ற பெரிய படங்கள் மார்ச், ஏப்ரலை குறி வைத்துள்ளதால்  வலிமை முன்னதாகவே வெளியாகவேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.


Kamal Haasan House of Khaddar: தலைசுற்ற வைக்கும் விலை.! ஆன்லைன் ஆடை விற்பனையை தொடங்கிய கமல்.!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண