அஜித்தின் நடிப்பில் ‘வலிமை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க வேற மாறி’ லிரிக் வீடியோ பாடலை 90 லட்சம் பார்வையார்கள் கண்டு ரசித்துள்ளனர்.
நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டது. இப்போது, வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று இரவு வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் ‘நாங்க வேற மாறி’ பாடலின் லிரிக் வீடியோ கடந்த 2ஆம் இரவு 10.45 மணியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அத்துடன் அஜித் கை கட்டி நிற்பது போன்ற ஸ்டில் ஒன்றையும் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தப் பாடலின் லிரிக் வீடியோவின் யூடியூப் லிங்கை சோனி மியூசிக் வெளியிட்டது. அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திராவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, சொன்ன நேரத்தில் ‘நாங்க வேற மாறி’ பாடல் வெளியானது. இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்த இந்தப் பாடலை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் தத்துவப் பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், ‘நாங்க வேற மாறி’ லிரிக் வீடியோ பாடலை 90 லட்சம் பார்வையார்கள் கண்டு ரசித்துள்ளனர். யூடியூப் டிரெண்டில் நம்பர் ஓன் இடத்தைப் பிடித்துள்ளது. அத்துடன் 1 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
அஜித்-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் தீனா தொடங்கி பல வெற்றி படங்கள் அமைந்துள்ளன. இந்தப் படத்தின் சிங்கிள் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், மீதமுள்ள பாடல்களுக்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனைத்து பாடல்களும் ஹிட் அடிக்கும் என்று அஜித் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தை பொருத்தவரை, ஆகஸ்ட் இறுதிக்குள் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், படத்தில் எஞ்சியுள்ள சில காட்சிகளை விரைந்து முடித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை பொருத்து, படத்தின் வெளியீடு தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.