தாய்லாந்து நாட்டில் துணிவு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் நடித்து வருகிறார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் கலவையான விமர்சனத்தை சந்தித்த நிலையில் 3வது படத்தை பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அஜித்தின் 61வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு “துணிவு” என பெயரிடப்பட்டுள்ளது. 






இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது.80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது.


மீதமுள்ள படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக்கில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று முடிவடைந்தது. இதனால் படம் திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.






இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் உட்பட பலரும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் துணிவு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.






வெளியான தகவலின் படி அஜித் தாய்லாந்தில் உள்ள கிராமப்பகுதிகளில் தனது பைக்கில் பயணம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸாக இருக்கும் அஜித்தை பார்த்த ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை கருத்துகளாக பதிவிட்டு வருகின்றனர்.