Just In





த்ரிஷா நெகட்டிவ் ரோலா.. ? விடாமுயற்சி படத்தின் க்ளைமேக்ஸை உளறிய பிரபலம்
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது

விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கி அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்பட வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன், ரெஜினா , ஆரவ் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்ஷ்னஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
அஜித் நடிப்பிக் கடைசியாக 2023 ஆம் ஆண்டு துணிவு திரைப்படம் வெளியானது. சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது விடாமுயற்சி படம் திரையரங்கில் வெளியாவதால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளார்கள். இப்படம் படப்பிடிப்பில் இருந்தபோதே படம் கைவிடப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. மேலும் படப்பிடிப்பின் போது கலை இயக்குநர் மிலன் உயிரிழந்ததும் பெரும் பின்னடைவாக இருந்தது. பல்வேறு சவால்களை கடந்து படக்குழுவின் தொடர் விடாமுயற்சியால் இன்னும் ஒரு நாளில் திரைக்கு வர இருக்கிறது விடாமுயற்சி
விடாமுயற்சி டிக்கெட் புக்கிங்
தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் படத்திற்கான புக்கிங் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.இ்ந்த நிலையில், சென்னையின் பிரபலமான திரையரங்கில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் மட்டும் விடாமுயற்சி படத்திற்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. இதை ரோகிணி தியேட்டர் நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெகட்டிவ் ரோலில் த்ரிஷா ?
ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தின் ரீமேக் தான் விடாமுயற்சி திரைப்படம். திருமணமான இரு தம்பதியினர் தங்கள் உறவில் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள். விவாகரத்து செய்துகொள்ளலாம் என்று அவர்கள் யோசித்து வரும் நிலையில் ஒரு பயணத்தின் போது எதிர்பாராத விதமாக மனைவி காணாமல் போகிறார். தனது மனைவியை தேடும் கணவனின் போராட்டமே விடாமுயற்சி படத்தின் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரேக்டவுன் படத்தின் கதை பலருக்கு தெரிந்தது தான் என்றாலும் இந்த கதையை அஜித்திற்கு ஏற்ற படி என்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பது படம் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும். அதே நேரம் இது வழக்கமான கதையாக இருக்காது என்றும் படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படத்தில் நாம் எதிர்பார்க்காத திருப்பங்கள் இருக்கலாம் என்று சினிமா ஆர்வலர் அபிஷேக் ராஜா பேசியுள்ளார். க்ளைமேக்ஸ் காட்சியில் த்ரிஷாவே கூட நெகட்டிவ் ரோலில் நடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. " தனத் கணவனை பழிவாங்க காணாமல் போன மாதிரி த்ரிஷா நடிப்பதே கூட கதையாக இருக்க வாய்ப்பிருக்கலாம் என ரசிகர்கள் இந்த படத்தின் கதையை டீகோட் செய்துள்ளார்கள்.