விடாமுயற்சி


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருக்கும் நிலையில் படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி. அந்த வகையில் படம் பற்றி இசையமைப்பாளர் அனிருத் சொன்ன கருத்தை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். 


விடாமுயற்சி படத்தின் என்ன எதிர்பார்க்கலாம்


விடாமுயற்சி என்ன மாதிரியான படமாக இருக்கும் என்பது குறித்து இயக்குநர் தெரிவிக்கையில் " இதை வழக்கமான ஒரு படமாக நினைத்து வர வேண்டாம். ஏனால் இதில் ஹீரோ இன்ட்ரோ இல்லை. பஞ்சு டயலாக் இல்லை , அதனால் இந்த படத்தில்  சுவாரஸ்யமான நிறைய விஷயங்கள் இருக்கின்றன


படம் ஒரு பிளாஸ்ட்


" அனிருத் ஒரு பெரிய திறமைசாலி என்று நமக்கு தெரியும். என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரியான ஒரு திறமைசாலி ஒவ்வொரு 25 வருடத்திற்கு ஒருமுறை முளைத்து வருவார். இந்தியாவில் அதிகம் பேசப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இந்த படத்தை பொறுத்தவரை அனிருத் இந்த படத்தில் முன்பே இணைந்து விட்டார். அதனால் அவர் எந்த மாதிரி பழகுவார் என்பது குறித்து எனக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது. ஆனால் அவரை சந்தித்த முதல் நாளே என்னுடைய தயக்கம் எல்லாம் உடைந்துவிட்டது. ஒவ்வொரு முறை அவருடைய ஸ்டுடியோவுக்கு நான் செல்லும்போது என்னை வழியனுப்பி வைக்க அவர் தெருவில் என் கார் வரை வந்து வழியனுப்பி வைப்பார். 






 விடாமுயற்சி படம் பார்த்து அனிருத் ' Sir The movie is a Blast. it will work wonders என்று கூறினார். இந்த படத்தில் என்னைக் காட்டிலும் அதிகம் உற்சாகத்தோடு வேலை செய்பவர் அனிருத் தான். நாம் ஒன்று கொடுத்தால் அதை இன்னும் பல மடங்கு எலிவேட் செய்யக்கூடியவர் அனிருத். " என மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.