சமையலில் பயன்படுத்தும் ‘Table Salt'-க்கு பதிலாக பொட்டாசியம் நிறைந்த உப்பு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
உணவில் உப்பின் முக்கியத்துவம் என்பது எல்லாரும் அறிந்ததே. சிலர், ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட உப்பு நுகர்வு இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படியிருக்கையில், இப்பொது புதிய அறிவுரை ஒன்றை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமையலில் பயன்படுத்தும் தூள் அப்பு, அதிக சோடியம் நிறைந்தது. அதை குறைக்க ’low sodium salt substitutes (LSSS)’ குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு வகைகளை அன்றாட சமையலில் சேர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவில் சோடியம் அளவை குறைப்பதால் இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் ஏற்படுதை தவிர்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் தவறான உணவு முறைகளால் உலக அளவில் 1.9 மில்லியன் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதில் அதிகளவு சோடியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடுகிறது. ஒரு நாளைக்கு 5 கிராம் அளவு உப்பு சேர்ப்பது மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. அதோடு, 2012-ல் வெளியிடப்பட்ட தகவலின்படி, சோடியம் அதிகம் நிறைந்த உப்பை, ஒரு நாளைக்கு 2 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கிறது. தினமும் அதிகளவு உப்பு சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்புகள் குறையும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் உள்ளவர்கள் உணவில் தினமும் 8 கிராம் அளவு உப்பு நுகர்வு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதை குறைக்கவும் சோடியம் நுகர்வை கட்டுப்படுத்தவும் பல சோடியம் அதிகம் நிறைந்த உப்பு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.
கடலில் இருந்து எடுக்கப்படும் கல் உப்பு, இந்து உப்பு,கோஷர் உப்பு ஆகிய பலவகையான உப்பு கிடைக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் டேபிள் சால்ட், (தூள் உப்பு) கடலில் இருந்து எடுத்தது கிடையாது. பதப்படுத்தப்பட்டு அயோடின் மற்றும் ஆன்டிகேக்கிங் போன்றவை சேர்த்து செயற்கையாக உருவாக்கப்படுகிறது.
கோஷர் உப்பு என்பது கரடுமுரடான உப்பு, இது குறைவாக சுத்திகரிக்கப்பட்ட உப்பு வகை. தூய சோடியம் குளோரைடு மற்றும் அயனியாக்கம் செய்யப்படாத ஒன்று. கடலில் இருந்து நீரை ஆவியாக்குவதன் மூலம் சேகரிக்கப்படுவது கடல் உப்பு. இது இயற்கையான தாதுக்களை கொண்டுள்ளது. கல் உப்பு சமைக்கும்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு வகைகளில் பொட்டாசியம் குளோரடு இருக்கிறது. இது உடலுக்கு தேவையான பொட்டாசியம் கிடைக்கிறது. இது இதய செயல்பாடுகளுக்கு நன்மை தரும்.
உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தப்படி, குறைந்த அளவு சோடியம் உள்ள உப்பு வகைகளை உணவில் சேர்ப்பது ஏன் நல்லது?
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்:
அதிக அளவு சோடியம் நுகர்வு உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும். தூள் உப்பு அதிகளவு சோடியம் குளோரைடு கொண்டுள்ளது. இதை தவிர்க்க வேண்டும்.
இதய நோய்களின் பாதிப்பை தவிர்க்கலாம்:
அதிகளவு சோடியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். மாரடைப்பு, ஸ்ட்ரோக் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். பொட்டாசியம் நிறைந்த உப்பு சாப்பிடுவது உடலில் எலக்ட்ரோலைட் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
சிறுநீரக பாதிப்பு குறையும்:
உடலில் உள்ள அதிக சோடியம் அளவை நீக்கும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. சோடியம் அதிகம் இருந்தால் சிறுநீரகத்தின் பணி அதிகம் இருக்கும். அப்போது சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கும் வாய்ப்பு அதிகம். சோடியம் குறைவாக இருந்தால் சிறுநீரக கல் உள்ளிட்ட சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளை குறைக்கும்.
சோடியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது எலும்புகளில் கால்சியம் குறைபாடுகள் ஏற்பட காரணமாகிவிடும். சோடியம் நிறைந்த தூள் உப்பு சாப்பிடுவதை குறைப்பதால் இதை தவிர்க்கலாம்.
செரிமான மண்டலம் சீராக செயல்படவும் குறைந்த அளவு சோடியம் உள்ள உப்பு வகைகளை சாப்பிடுவது நல்லது.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.