2018 தீபாவளி


இந்த தீபாவளிக்கு அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் ஏதாவது ஒரு சின்ன அப்டேட் கிடைத்துவிடாதா என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் 2015 ஆம் ஆண்டு தீபாவளி அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் நினைவில் இருக்கும். உலகநாயகன் கமல் நடித்த தூங்காவனம் படத்துடன் களமிறங்கியது அஜித் நடித்த வேதாளம் திரைப்படம். இந்த சம்பவம் நடந்து எட்டு வருடங்கள் ஆகின்றன.


அஜித்துடன் மோதிய கமல்


சிறுத்தை சிவா இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் நடித்தப் படமே வேதாளம். முன்னதாக இந்த கூட்டணியில் வெளியான வீரம் திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்றது வீரம் திரைப்படம். இதனைத் தொடர்ந்து வேதாளம் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அஜித் ரசிகர்க்ளை மிரள வைத்தது. கூடுதலாக இந்த முறை அனிருத் இசையில் வெளியான ஆலுமா டோலுமா பாடல் பட்டிதொட்டி எல்லாம் பரவி இருந்தது.

ரவுடியாக இருக்கும் அஜித், அண்ணன் தங்கை பாசம், அனிருத்தின் இசை, சூரியுடன் காம்பினேஷன் என படத்தில் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளியை கொண்டாட போதுமான ஒரு ஆக்‌ஷன் படமாக அமைந்தது வேதாளம் படம்.


 கிக் இல்லாத தூங்காவனம்


மறுபக்கம் கமல், த்ரிஷா நடித்த தூங்காவனம் திரைப்படம் சைலண்டாக வெளியாகியது. கிஷோர்,  ராஜேஷ் எம் செல்வா, பிரகாஷ் ராஜ்,  மது ஷாலினி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசைமைத்தார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் மொழியாக்கப்பட்டது தூங்காவனம். மன்மதன் அம்பு, உத்தம வில்லன், கடாரம் கொண்டான் உள்ளிட்டப் படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இந்தப் படத்தை இயக்கிநார்.


பிரெஞ்சுத் திரைப்படமான ஸ்லீப்லெஸ் நைட்ஸ் படத்தில் ரீமேக்காக உருவான இந்தப் படம் விறுவிறுப்பான கதையுடன் இருந்தாலும் இந்தப் படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்ல அதில் ஒரு முக்கிய காரணம் வேதாளம் படம் சக்கை போடு போட்டதுதான்.


முழுக்க முழுக்க ஓர் இரவில் நடக்கு கதையான தூங்காவனம் திரைப்படம் தீபாவளியை குத்தாட்டம் போட்டு கொண்டாட காத்திருந்த ரசிகர்க்ளுக்கு கொஞ்சம் அதிகமாகவே க்ளாஸியாக இருந்தது என்று சொல்லலாம். அதுவும் இல்லாமல் இந்தப் படத்தில் பெரிய அளவில் பாடல்களும் இல்லாதது ரசிகர்களுக்கு ஒரு குறையாக அமைந்தது. எல்லா முறையும்போல் இந்த முறையும் தீபாவளிக்கு புது முயற்சி ஒன்றை கமல் மேற்கொண்டார்.