நாள் - 10.11.2023 -  வெள்ளிக்கிழமை


நல்ல நேரம்:


நண்பகல் 12.15 மணி முதல் பகல் 1.15 மணி வரை


இராகு:


காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம்:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.  


ரிஷபம்


குழந்தைகளுடன் பொழுதுகளை செலவு செய்து மனம் மகிழ்வீர்கள். மறைமுக தகவல்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். போட்டி, பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.


மிதுனம்


அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.


கடகம்


எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். வீடு விற்பனையில் இருந்துவந்த தாமதம் குறையும். ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நம்பிக்கை வேண்டிய நாள்.


சிம்மம்


உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.  பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். இழுபறியான சில பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.


கன்னி


சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். திடீர் பயணங்களால் மாற்றமான சூழல் அமையும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். எதிர்கால சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள்.


துலாம்


எதிலும் நிதானத்துடன் செயல்படவும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் மேம்படும். உற்சாகம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பொது காரியங்களில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்கள் தீர ஆலோசனைகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சலனம் நிறைந்த நாள்.


தனுசு


வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். எதிலும் பேராசையின்றி செயல்படவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் கௌரவப் பொறுப்புகள் கிடைக்கும். ஆக்கம் நிறைந்த நாள்.


மகரம்


புதியவர்களின் அறிமுகத்தால் மாற்றம் பிறக்கும். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவல் பணிகளில் துரிதம் ஏற்படும். மனதளவில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்ப்பு விலகும் நாள். 


கும்பம்


பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். இனம்புரியாத சில செயல்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். பயணம் நிறைந்த நாள்.


மீனம்


எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் உற்சாகமாக காணப்படுவீர்கள். வர்த்தகப் பணிகளில் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.