சிறுத்தை சிவா அஜித்துடன் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அஜித் தற்போது வினோத் இயக்கும் அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார். அஜித் டபுள் ரோலில் நடிக்கும் இந்தப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் எனத் தெரிகிறது. முன்னதாக வெளியான வலிமை படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்தப்படம் ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற வில்லை. அதனால் இதில் விட்டதை அடுத்தப்படத்தில் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஏகே 61 படத்தில் அஜித்தும் வினோத்தும் மும்மரமாக வேலை செய்து வருகிறார்கள். 


 






இதற்கு அடுத்தப்படியாக நடிகர் அஜித்  ‘நானும் ரெளடிதான்’  ‘ காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ்  சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இதற்கு அடுத்தப்படியாக அஜித் சிவாவின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது குறித்து விகடன் நாளிதலுக்கு சிவா பேசும் போது “ புன்சிரிப்புடன் அதை அஜித் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வார்கள்” என்று பேசியிருக்கிறார். அவர் சொன்னதை வைத்து பார்க்கும் போது அஜித்தை சிவாவை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாக விட்டது. இந்தப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.