ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தொடர்ந்து அடுத்தடுத்து பல அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, படத்தின் கதாநாயகியும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகையுமான மஞ்சு வாரியர் ஜிப்ரான் இசையமைப்பில் துணிவு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் வெளியானது.

Continues below advertisement






இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பஞ்சாபில் 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததையடுத்து டப்பிங் பணிகள் மும்மரமாக நடைபெற்று அதுவும் நிறைவிடைந்தது.



சில்லா சில்லா ஷூட்டிங்:










இந்த படத்திற்காக சென்னையில் கோகுலம் ஸ்டுடியோஸில் பிரமாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த செட்டில் சில்லா சில்லா பாடல் படப்பிடிப்பு நடைபெற்றது எனக் கூறப்படுகிறது. அஜித் குமார் இடம்பெறும் இந்த பாடலின் படப்பிடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சென்று பார்வையிட்டதாக தகவல் பரவியது. தற்போது,  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், பாடல்களுக்கான ஷுட்டிங் என அனைத்தும் நவம்பர் 29 ஆம் தேதியான நாளை முடிவடைகிறது. இப்படமானது பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவியுள்ளது. அத்துடன், ஊரே துணிவு பட போஸ்டர் மயமாகவுள்ளது. 


மேலும் படிக்க : Gautham Karthik - Manjima Mohan: காதலி மஞ்சிமாவை கரம் பிடித்த கௌதம் கார்த்திக்..வாழ்த்து மழையில் நனையும் க்யூட் ஜோடி..