தமிழின் சூப்பர் ஸ்டார்கள் அடுத்தடுத்து படங்களுக்கான அப்டேட் கொடுத்து கொடுத்து ட்ரெண்டிங்கில் இருந்துகொண்டிருக்க, ஜாலியாக உலகம் சுற்றும் அஜித்தின் லீக் ஆகும் புகைப்படங்களே புயலை கிளப்பி வருகின்றன.


ஏகே61


வலிமை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் அதே டீமுடன் இணைந்து அடுத்த பட வேலைகளை தொடங்கினார். வங்கி கொள்ளை தொடர்பான கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. கேட்பதற்கு மங்காத்தா சாயல் இருந்தாலும் இது வேற என்று கூறப்படுகிறது. 






படப்பிடிப்புக்கு இடையே ஓய்வு


இந்த திரைப்படத்திற்காக ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மவுண்ட் ரோடு போன்ற அமைப்பை செட் போட்டதாக கூறுகிறார்கள். சென்னையில் இது போன்ற வேலைகளை செய்தால் தமிழ் சினிமா துறை தொழிலாளர்கள் வேலை பெறுவார்களே என்று பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே செல்வமணி கண்டனம் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சென்னையிலும் சில காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  படப்பிடிப்புக்கு இடையில் சிறிய ஓய்வு கிடைத்துள்ளதால் உலகை சுற்றி பார்க்க கிளம்பி விட்டார் அஜித்.






அஜித்தின் சுற்றுப்பயணம்


அவர் ஆங்காங்கே நின்று பெட்ரோல் போடும் புகைப்படம், ஓய்வெடுக்கும் புகைப்படம், சூப்பர் மார்க்கெட் சிசிடிவி விடியோ ஆகியவை வெளியாகி வைரலாகி வந்தன. ஐரோப்பிய நாடுகளில் தனது பைக்கில் சுற்றிய அஜித் குமார் சோசியல் மீடியாக்களில் இல்லை என்றாலும் எப்படியோ அவரது புகைப்படம் வெளியாகி வைரலாகிக் கொண்டேதான் இருந்தது.


தொடர்புடைய செய்திகள்: 40 வயது பெண்ணுடன் உடலுறவு.. முதியவர் அதிர்ச்சி மரணம் - மாத்திரையா, மதுவா? விசாரணை தீவிரம்!


குடும்பத்தோடு டின்னர்


தற்போது அவரது மனைவி ஷாலினியும், மகள் அனோஷ்காவும், மகன் ஆத்விக்கும் அவரோடு பாரிஸில் இணைந்துள்ளனர். அஜித் ஷாலினி பெரிதாக வெளியுலகத்திற்கு தங்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை என்பதால், இதுபோன்ற புகைப்படங்கள் வேகமாக வைரலாகி விடும். அதே போல தனது மனைவி, குழந்தைகள், மற்றும் சில நண்பர்களுடன் பாரிஸில் ஒரு இரவு உணவு உண்ணும் புகைப்படமும் தற்போது வைரலாக பரவி வருகிறது.






வைரல் புகைப்படங்கள்


அதே போல தனது மகன் ஆத்விக்கின் கையை பிடித்துக்கொண்டு நடந்து செல்லும் ஒரு புகைப்படமும் பகிரப் பட்டு வைரலாகி வருகிறது. அதுபோல பாரிஸின் ஈபில் டவர் முன்பு ஒரு ரசிகரின் டீ-ஷர்ட்டில் ஆட்டோகிராப் இட்டுத்தரும் விடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.






ஏகே62


தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஏகே61 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்க இந்த ட்ரிப்பை முடித்து விரைவில் படப்பிடிப்பில் இணைவார் அஜித் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தின் வேலைகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.