நாம் அனைவரும் நம்முடைய வாழ்நாள் முழுவதும் இந்த நால்வரை என்றுமே மறக்கக்கூடாது. அவர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம். நம்மை பெற்றவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் நம்மை நல்வழியில் நடத்தி நலமும் வளமும் பெற வழிகாட்டியை இருக்கும் குருமார்கள். அப்பேற்பட்ட தெய்வத்திற்கு நிகரான குருக்களின் முக்கியத்துவத்தை நினைவு கூறும் வகையில் ஆடி மாதம் பௌர்ணமி திதி அன்று கொண்டாடப்படும் தினம் தான் குரு பூர்ணிமா. இந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி, புதன்கிழமை இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நம்மை சரியான பாதையில் வழிநடத்தும் தன்நலமற்ற தேவதைகளான ஆசிரியர்களுக்கு நன்றி கூறுவது அவசியம்.
ஆதி கடவுள் மகா விஷ்ணுவின் அம்சமானவர் மகரிஷி வேத வியாஸ். அவர் மகா விஷ்ணுவிடம் இருந்து வேதங்களை பெற்று அதனை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்களாக பிரித்தார். அவற்றை எளிய முறையில் மக்களுக்கு புரியும் வகையில் 18 புராணங்களாக தொகுத்து வழங்கினார். அந்த மகா குருவின் பிறந்த நாளான ஆடி மாதம் பௌர்ணமி திதி நாள் தான் குரு பூர்ணிமா தினமாக கொண்டப்படுகிறது.
பண நெருக்கடிக்கு தீர்வு :
குரு பூர்ணிமா தினத்தன்று அன்று ஏழை எளியோருக்கு பருப்பு தானம் செய்வதன் மூலம் பண நெருக்கடியில் இருந்து மீண்டு வரலாம். மஞ்சள் நிறத்திலான இனிப்பு வகைகளை தானம் செய்வதன் மூலம் குரு பலம் பெறுவார். அதனால் உங்களுடைய பொருளாதார நிலையை மேலும் மேம்படும் என நம்பப்படுகிறது
வாழ்வில் வெற்றி பெற :
ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோயிலுக்கு சென்று துருவிய தேங்காய் கொடுத்து அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் வெற்றி பெரும். இந்த புனிதமான நாளில் விஷ்ணு பகவானையும் வழிபடுதல் மிகவும் சிறப்பு. குரு பூர்ணிமா தினத்தன்று மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் இனிப்புகளை தானம் செய்வது நல்ல பலனை கொடுக்கும் என நம்பப்படுகிறது
திருமண தடை விலக:
குரு பூர்ணிமா தினத்தன்று மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் மஜால் உடைகள் தானம் செய்து வழிபாடு செய்வதன் மூலம் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும். திருமண தடைகள் விலக இந்த நன்னாளில் குரு யந்திரத்தை வைத்து முறையாக வழிபடுங்கள். இந்த பிராத்தனையை செய்வதன் மூலம் கூடிய விரைவில் நல்ல பொருத்தமான வரன் அமைந்து திருமண நிச்சயமாகும் என நம்பப்படுகிறது.
தென் இந்தியாவை விடவும் வட இந்திய பகுதிகளில் குரு பூர்ணிமா அனுசரிக்கும் வழக்கம் அதிகமாக உள்ளது