ஷைன் டாம் சாக்கோ


மலையாளத்தில் தல்லுமாலா, கொரோனா பேப்பர்ஸ், உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ (Shine Tom Chacko). தமிழில் கார்த்திக் சுப்பராஜ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் உள்ளிட்ட தமிழ் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஃபகத் ஃபாசில், டொவினோ தாமஸ் போன்ற நடிகர்களுக்கு இருக்கும் வரவேற்பு இவருக்கு இருந்து வருகிறது. மலையாள, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக தற்போது நடித்து வருகிறார், இப்படியான நிலையில்  அவரது  நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. 


காதலியுடன் விரைவில் திருமணம்






ஷைன் டாம் சாக்கோ தனது காதலியும் மாடலுமான தனுஜாவை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இந்த ஜோடியின் நிச்சயம் அவர்களின் குடும்பத்தின் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது.


தற்போது ஜூனிய என்.டி ஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா மற்றும் ஹாப்பி நியூ இயர், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஷைன் டாம் சாக்கோ.